PulseNews
வணிகம்

கூடுதல் விலைக்கு மது விற்றால் சஸ்பெண்ட், பணிநீக்கம்: டாஸ்மாக் நிர்வாகத்தின் திருத்திய வழிகாட்டுதல்கள்

டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதில் ஈடுபடும் பணியாளர்கள் மீதான நடவடிக்கைகளுக்கான விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வது முதன்முறை கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளர் ஒரு மாதம் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்படுவார். தவறு 2-வது முறையாக தொடரும் பட்சத்தில், 3 மாதங்கள் பணியிடை நீக்கம் செய்யப்படும். 3-வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். 3-வது முறை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது விசாரணையில் உறுதி செய்யப்படும் பட்சத்தில், பணியாளர் நிரந்தரமாக பணிநீக்கம் (Dismissal) செய்யப்படுவார். மேலும், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகும் பணியாளர்களின் விவரங்கள் அனைத்தும் அவர்களின் அதிகாரப்பூர்வ பணிப்பதிவேட்டில் (Service Register) பதிவு செய்யப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. அரசு நிர்ணயித்த விலையையே விற்க வேண்டும் என்ற விதியை மீறுபவர்கள் மீது இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் உறுதியாக எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

மூலம்: The Indian Express
#business