கிளாம்பாக்கம் ரயில் நிலையம் தீபாவளிக்கு முன் திறக்கப்பட வாய்ப்பு..!
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வருகிற தீபாவளிக்கு முன்னதாக திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை கோட்ட ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேட்டியளித்த சென்னை கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளர் செந்தில்குமார், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும், பேருந்து நிலையத்தையும் இணைப்பதற்கான ஆகாய நடைமேடை பணி முடிவடையவில்லை என கூறினார். செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே 67 கிலோ மீட்டர் தூரத்திற்கு 926 கோடி ரூபாயில் 2வது வழித்தடம் அமைக்கப்பட உள்ளதாகவும், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30 கிலோ மீட்டர் தூரம் வரை 713 கோடி ரூபாயில் 4 வழித்தடத்துட அமைக்க திட்டம் வகுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்த தகவலை சென்னை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் செந்தில்குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் ஆகாய நடைமேடை கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே 926 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 67 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டாவது ரயில் பாதை அமைக்கும் திட்டம் நடைபெறவுள்ளது.