PulseNews
வணிகம்

முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது இன்று விவாதம்!

தமிழகச் சட்டமன்ற பேரவையில் த.வெ.க. அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அது மீதான பொது விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை மீண்டும் இன்று (24.08.2026) கூடுகிறது. இன்றைய தினம் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், பள்ளிக்கல்வி, செய்தி, விளம்பரம் மற்றும் உயர்கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது. எனவே இத்துறையின் பொறுப்பில் உள்ள முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ராஜ் மோகன், விஸ்வநாதன் ஆகியோர் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பதில் அளித்துப் பேசுவார்கள் அதன்படி மூன்று முக்கியத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற இருப்பதால் அத்துறைகள் சார்ந்த பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் அவையில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் வட்டாராத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது இன்று விவாதம்!
PulseNews சுருக்கம்

தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கைகள் மீதான விவாதத்தைத் தொடர்ந்து, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஆகஸ்ட் 24, 2026) சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது.

இன்றைய கூட்டத்தொடரில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், பள்ளிக்கல்வி, செய்தி, விளம்பரம் மற்றும் உயர்கல்வி ஆகிய துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business