PulseNews
வணிகம்

சென்னை எழும்பூர் மறுசீரமைப்பு: தாம்பரம், மாம்பலம், கடற்கரைக்கு மாற்றப்பட்ட முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் அங்கு வந்து சேரும் பல விரைவு ரயில்கள் தற்காலிகமாக தாம்பரம், சென்னை கடற்கரை மற்றும் மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் அல்லது அங்கு வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு அமலுக்கு வரும் இந்த ரயில் சேவை மாற்றங்களின் முழு விவரங்கள்; 1. மன்னார்குடி – எழும்பூர் விரைவு ரயில் சேவை மாற்றம் மன்னார்குடி – எழும்பூர் எக்ஸ்பிரஸ்: செப்டம்பர் 4 முதல் அக்டோபர் 13 வரை, மன்னார்குடியில் இருந்து இரவு 10:50 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். எழும்பூர் – மன்னார்குடி எக்ஸ்பிரஸ்: செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 14 வரை, எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்தில் இருந்து இரவு 11:25 மணிக்குப் புறப்படும். 2. திருச்சி, மும்பை மற்றும் சேலம் விரைவு ரயில்கள் திருச்சியில் இருந்து இரவு 10:35 மணிக்குப் புறப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், செப்டம்பர் 9 முதல் 15 வரை மற்றும் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 14 வரை எழும்பூருக்குப் பதிலாக மாம்பலம் வரை மட்டுமே இயக்கப்படும். மும்பையிலிருந்து இரவு 10:52 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், செப்டம்பர் 12 முதல் 15 வரை எழும்பூருக்குப் பதிலாக சென்னை கடற்கரை (Beach) ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். Changes in Train Services 🚆 Due to redevelopment works at Chennai Egmore Railway Station, train services will undergo temporary changes from 01 September to 15 October 2026. Passengers are requested to check train details before travel and plan their journey accordingly.... pic.twitter.com/xeCtw28mlH — Southern Railway (@GMSRailway) August 18, 2026 சேலத்திலிருந்து இரவு 9:30 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், செப்டம்பர் 12 முதல் 15 வரை எழும்பூருக்குப் பதிலாக மாம்பலம் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில், இந்த ரயில் செப்டம்பர் 13 முதல் 16 வரை எழும்பூருக்குப் பதிலாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11:30 மணிக்குப் புறப்படும். 3. உழவன் எக்ஸ்பிரஸ் தாமதமாக இயக்கம்: எழும்பூர் மறுசீரமைப்புப் பணிகளால் தஞ்சாவூர் – எழும்பூர் உழவன் விரைவு ரயிலின் நேரத்திலும் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 16 முதல் 19 வரை மாம்பலம் - கோடம்பாக்கம் வழித்தடத்தில் இந்த ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக இயங்கும். செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 15 வரை மாம்பலம் - கோடம்பாக்கம் வழித்தடத்தில் இந்த ரயில் 30 நிமிடங்கள் தாமதமாக இயங்கும். சென்னை எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்காலிகமாகச் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் தங்களின் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ரயில்கள் புறப்படும் மற்றும் சென்றடையும் நிலையங்களை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சென்னை எழும்பூர் மறுசீரமைப்பு: தாம்பரம், மாம்பலம், கடற்கரைக்கு மாற்றப்பட்ட முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்
PulseNews சுருக்கம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளின் காரணமாக, அங்கிருந்து இயக்கப்படும் பல்வேறு விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, எழும்பூர் நிலையத்திற்கு பதிலாக தாம்பரம், சென்னை கடற்கரை மற்றும் மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்கள் தற்காலிக முனையங்களாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை மாற்றங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அமலில் இருக்கும்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business