9th பாஸ்; Resume கூட இல்லாதவரை நம்பிய Founder... இந்திய Startup உலகம் பேசும் இன்ஸ்பயரிங் கதை!
2016-ல் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த, ஆங்கிலம் பேசத் தெரியாத ஒரு டாக்ஸி ஓட்டுநரை தனது நிறுவனத்தின் முதல் ஊழியராக அவர் வேலைக்கு அமர்த்தியுள்ளார். இன்று, பத்தாண்டுகளுக்குப் பிறகு அதே ஊழியர் அந்நிறுவனத்தின் 'Procurement Head'-ஆக உயர்ந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. |

2016-ஆம் ஆண்டில், ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்ற, ஆங்கிலம் பேசத் தெரியாத டாக்ஸி ஓட்டுநர் ஒருவரை ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனர் தனது முதல் ஊழியராகப் பணியில் சேர்த்தார். எவ்வித முன் அனுபவமும், ரெஸ்யூம் கூட இல்லாத அந்த நபரை அவர் நம்பி இந்த வாய்ப்பை வழங்கினார்.
தற்போது பத்து ஆண்டுகள் கழிந்த நிலையில், அதே ஊழியர் தனது கடின உழைப்பால் உயர்ந்து அந்நிறுவனத்தின் கொள்முதல் தலைவராக (Procurement Head) பொறுப்பேற்றுள்ளார். இந்த ஊக்கமளிக்கும் செய்தி தற்போது இந்திய ஸ்டார்ட்அப் உலகில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.