இலங்கைக்கு படையெடுத்துள்ள பெருந்தொகை சுற்றுலாப் பயணிகள்!
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) சமீபத்திய தகவல்களின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 14.6 லட்சத்திற்கும் (1.46 மில்லியன்) அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கடந்த ஜனவரி 1 முதல் ஓகஸ்ட் 18 வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 14,68,980 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக SLTDA தெரிவித்துள்ளது. இதில் ஓகஸ்ட் மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும் 1,25,562 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். ஓகஸ்ட் மாதத்தில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை ...

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 14.6 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். கடந்த ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 18 வரையிலான காலப்பகுதியில் மட்டும் மொத்தம் 1,468,980 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும் 1,25,562 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். நாட்டின் சுற்றுலாத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.