PulseNews
வணிகம்

கடன் வாங்கியவர்களை மிரட்டி, அச்சுறுத்த கூடாது; ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு..!

இந்​தி​யா​வில் வங்​கி​கள் மற்​றும் நிதி நிறு​வனங்​களிடம் கடன் பெற்று தவணையை செலுத்தத் தவறும் வாடிக்​கை​யாளர்​களை, வசூல் முகவர்​கள் அச்​சுறுத்​து​வதைத் தடுக்​கும் வகையில் இந்​திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இந்த புதிய அதிரடி உத்​தர​வைப் பிறப்பித்துள்ளது. கடன் வாங்​கிய​வர்​களை மிரட்​டு​தல், திட்​டு​தல், சமூக வலை​தளங்​களில் தொல்லை தருதல் போன்ற செயல்​களில் வங்கி ஏஜெண்டுகள் ஈடு​படக்​ கூ​டாது என்று புதிய விதி​களை வெளி​யிட்​டுள்​ளது. இது கடன் வாங்​கிய​வர்​களுக்கு பெரிய அளவில் நிம்​ம​தியை கொடுக்கும் வகையில் எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அதாவது கடன் வாங்கியவர்களிடம் கடன் நிலு​வையை வசூலிப்​பது வங்​கி​யின் உரிமை​யாக இருந்தாலும், அது வாடிக்​கை​யாளரின் தனிப்​பட்ட சுதந்​திரம், கண்ணி​யம் மற்​றும் தனி​யுரிமை​யைப் பாதிக்​கும் வகை​யில் அமையக் ​கூ​டாது என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. வங்​கி​கள் மற்​றும் வசூல் முகவர்​களுக்​கான இந்த ஒருங்​கிணைந்த புதிய வழி​காட்​டு​தல் விதி​முறை​கள் 2027 ஜனவரி 1-ந் தேதி முதல் நாடு முழு​வதும் அதி​காரப்​பூர்​வ​மாக அமலுக்கு வரவுள்​ளன. இந்த புதிய விதி​களின்​படி, வங்கி வசூல் முகவர்​கள் காலை 08 மணி முதல் மாலை 07 மணி வரை மட்​டுமே வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்​ளவோ அல்​லது நேரில் சென்று சந்​திக்கவோ முடியும். மேலும், தெரி​யாத அல்​லது புதிய செல்​போன் எண்​களில் இருந்து அழைப்​பது, அச்​சுறுத்​தும் வார்த்​தைகளைப் பயன்​படுத்​து​வது, வாடிக்​கை​யாளர்​களை திட்​டு​வது, மிரட்​டு​வது, சமூக வலைதளங்களில் வாடிக்​கை​யாளரின் விவரங்​களைப் பதி​விட்டு தொல்லை தரு​வது மற்​றும் உறவினர்​கள், நண்​பர்​களைத் தொடர்பு​கொண்டு தொந்​தரவு செய்​வது முற்​றி​லு​மாகத் தடை செய்​யப்​பட்​டுள்​ளது. அத்துடன், வசூல் முகவர்​கள் தங்களது அடை​யாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Seithipunal1 நாள் முன் · புதுப்பிக்கப்பட்டது
கடன் வாங்கியவர்களை மிரட்டி, அச்சுறுத்த கூடாது; ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு..!
PulseNews சுருக்கம்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று தவணை செலுத்தத் தவறியவர்களை, வசூல் முகவர்கள் மிரட்டுவதையும் அச்சுறுத்துவதையும் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. கடன் வசூலிப்பது வங்கியின் உரிமையாக இருந்தாலும், அது வாடிக்கையாளரின் கண்ணியம் மற்றும் தனி உரிமையைப் பாதிக்கக் கூடாது என்று ஆர்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த புதிய விதிமுறைகள் 2027 ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன. இதன்படி, வசூல் முகவர்கள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். மிரட்டுதல், திட்டுதல், சமூக வலைதளங்களில் தொல்லை தருதல், தெரியாத எண்களிலிருந்து அழைத்தல் மற்றும் வாடிக்கையாளரின் உறவினர்களைத் தொடர்பு கொள்வது போன்ற செயல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், முகவர்கள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#business