அஞ்சல்துறையில் வேலை: தமிழ்நாட்டில் 2,095 பணியிடங்கள்- 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அஞ்சல் துறை வேலை: 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 2,095 கிராம அஞ்சல் பணியாளர், கிளை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்கள், தேர்வு இல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் மூலம் நியமனம், 18-40 வயது வரம்பு, ஆன்லைன் விண்ணப்பம் 31-8-2026 முதல் 19-9-2026 வரை. Tamil Nadu postal jobs: 2,095 Gramin Dak Sevak & branch postmaster vacancies for SSLC pass candidates, no written exam, selection via merit list, age limit 18-40, apply online between August 31 and September 19, 2026.

தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் பணியாளர் மற்றும் கிளை அஞ்சல் அதிகாரி பணியிடங்களுக்கான 2,095 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எந்தவித எழுத்துத் தேர்வும் இன்றி, மதிப்பெண் அடிப்படையிலான தகுதிப் பட்டியல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31, 2026 முதல் செப்டம்பர் 19, 2026 வரை சமர்ப்பிக்கலாம்.