“சென்னையில் ஒலிம்பிக் இல்லம் அமைக்கப்படும்” - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி அறிவிப்பு!
தமிழக சட்டமன்ற பேரவையின் தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அது மீதான பொது விவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நிதிநிலை அறிக்கை தொடர்பாக நெடுஞ்சாலை, பொதுப்பணி, விளையாட்டு மேம்பாடு மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை இன்று (18.08.2026) நடைபெற்றது. இதில் குறிப்பாக பொதுப்பணி, விளையாட்டு மேம்பாடு துறை ரீதியாக எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலுரை வழங்கிய , பொதுப்பணி, விளையாட்டு மேம்பாடு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “சென்னை, கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடியை இணைக்கும் தொழில்தட விரைவுச்சாலை உருவாக்கப்படும். சென்னை - கன்னியாகுமரி 8 வழிச் சாலை, சென்னை நுழைவு வழித்தடச் சந்திப்புகளை மேம்படுத்துதல், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு உயர்மட்டச் சாலை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரியை இணைக்கும் கடல்வழி உயர்மட்டச் சாலைத் தொடர், மும்பை - நவி மும்பை கடல் இணைப்புச் சாலை போன்று கட்டம் கட்டமாக உருவாக்கப்படும். முதலமைச்சரின் பாதுகாப்பான சாலைகள் இயக்க திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போக்குவரத்தி விதிமீறல்களை கண்டறிதல், சாலை பாதுகாப்பு பணிகள் நெடுஞ்சாலை அவசர சிகிச்சை மையங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு கண்காணிப்புக் குழு ஆகியவற்றை உள்ளடக்கி செயல்படுத்தப்படும். சாலைகளை சீரான முறையில் பள்ளங்களில்லாமல் பராமரிக்க செயல்திறன் அடிப்படையிலான சாலைப் பராமரிப்பு, தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் ‘நம்ம சாலை’ செயலி மேம்பாட்டை உள்ளடக்கிய சீரான சாலைகள் திட்டம் 250 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும். 2036 ஒலிம்பிக் போட்டிகளை இலக்காகக் கொண்டு 8 முதல் 18 வயதுக்குட்பட்ட, விளையாட்டில் திறமையான இளம் மாணவ மாணவியரை அடையாளம் கண்டு எதிர்கால ஒலிம்பில் சாம்பியன்களாக உருவாக ‘SDAT’ திறன் கண்டறிதல் பிரிவு ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டில் தற்போது 27 மாவட்டங்களில் மாணவர்களுக்கான 25 விளையாட்டு விடுதிகளும் மாணவியருக்கான 19 விளையாட்டு விடுதிகளு என மொத்தம் 44 விளையாட்டு விடுதிகள் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் மாணவ மாணவியர்களுக்கு புதிய விளையாட்டு விடுதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், அனைத்து விளையாட்டு விடுதிகளிலும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்கிப் பயிற்சி பெறுவதற்குத் தேவையான சிறப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அனைத்து விளையாட்டு விடுதிகளும் நவீனமயமாக்கப்பட்டு குளிர்சாதன வசதிகள் ரூ.15 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகள் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக ‘தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - ஒலிம்பிக் இல்லம்’ சென்னையில் அமைக்கப்படும். தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளான கபாடி, கோ-கோ, சிலம்பம், களரிப்பயட்டு, மல்லர்கம்பம் உள்ளிட்ட விளையாட்டுகளை உலக அளவிற்குக் கொண்டு செல்லும் வகையில் ஆண்டுதோறும் கிராமிய பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் ரூ.42 கோடி செலவில் நடத்தப்படும். மேலும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் சிங்கப்பெண் விளையாட்டுத் திருவிழா நடத்தப்படும்” என்பன போன்ற பல்வேறு அறிவி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, தலைநகர் சென்னையில் ஒலிம்பிக் இல்லம் அமைக்கப்படும் என்று அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்தைத் தொடர்ந்து, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதங்கள் தற்போது சட்டப்பேரவையில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நெடுஞ்சாலை, பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீது இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.