60% வரை நில வழிகாட்டி மதிப்பு உயர்கிறது ? தமிழகத்தில் புதிய பட்டியல் தயாரிப்பு
தமிழகத்தில் பத்திரப்பதிவு வருவாயை அதிகரிக்கும் நோக்கில், நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை மாற்றியமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில் சில பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு 60 சதவீதம் வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் நில வழிகாட்டி மதிப்புகள் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. இதனால், பல இடங்களில் தற்போதைய சந்தை நிலவரத்துக்கும் வழிகாட்டி மதிப்புக்கும் இடையே பெரிய வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அரசுக்கு பத்திரப்பதிவு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. [...]

தமிழகத்தில் பத்திரப் பதிவு வருவாயை அதிகரிக்க, நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை மாற்றி அமைக்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. இதில் சில பகுதிகளில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 60 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் வழிகாட்டி மதிப்புகள் முழுமையாகச் சீரமைக்கப்படவில்லை. தற்போதைய சந்தை நிலவரத்திற்கும் வழிகாட்டி மதிப்பிற்கும் இடையே நிலவும் பெரிய வேறுபாட்டினால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகக் கருதப்படும் நிலையில், இந்தப் புதிய பட்டியல் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.