PulseNews
வணிகம்

திருச்சியில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘பாரத் மால்’! 3-வது அடித்தளப் பணி தொடக்கம் — என்னென்ன வசதிகள் தெரியுமா?

திருச்சி: மாநகரின் வர்த்தக மற்றும் பொழுதுபோக்கு உலகிற்கு புதிய அடையாளமாக உருவெடுத்து வரும் ‘பாரத் மால்’ கட்டுமானப் பணிகள் வேகமெடுத்துள்ளன. திருச்சி மற்றும் சுற்றுவட்டார மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட வணிக வளாகத்தின் நிலத்தடி கட்டுமானப் பணிகளில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 5.15 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பாரத் மால், வெறும் வணிக வளாகமாக மட்டுமின்றி, குடும்ப பொழுதுபோக்கு, உணவு, ஷாப்பிங் மற்றும் திரைப்பட அனுபவம் என அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

3 அடித்தளங்களின் அகழ்வுப்பணி நிறைவு!

பாரத் மால் கட்டிடத்திற்காக திட்டமிடப்பட்டுள்ள 3 நிலத்தடி தளங்களுக்கான மண் அகழ்வுப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, தற்போது 3-வது நிலத்தடி தளத்திற்கான கட்டுமானப் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த பிரம்மாண்ட கட்டிடம் 3 Basement Floors, Lower Ground (LG), Upper Ground (UG) மற்றும் 6 மேல்தளங்கள் என பல அடுக்குகளைக் கொண்ட நவீன கட்டிடமாக உருவாக்கப்படுகிறது.

ஷாப்பிங் முதல் பொழுதுபோக்கு வரை!

மக்களின் அன்றாட தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில் பாரத் மாலில் பிரம்மாண்ட ஹைப்பர்மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. குடும்பத்தினர் ஒரே இடத்தில் தேவையான பொருட்களை வாங்கும் வகையில் பல்வேறு வசதிகள் இடம்பெறுகின்றன.

மேலும், முன்னணி தேசிய மற்றும் சர்வதேச பிராண்டுகளின் ஆடைகள், ஃபேஷன் பொருட்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றுக்கான Anchor மற்றும் Vanilla Stores அமைக்கப்பட உள்ளன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வகையில் நவீன விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மண்டலமும் உருவாக்கப்படுகிறது. இதனால், ஷாப்பிங் மட்டுமின்றி குடும்ப பொழுதுபோக்கிற்கான முக்கிய இடமாகவும் பாரத் மால் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே இடத்தில் பலவித சுவைகள்!

உள்நாட்டு உணவுகள் முதல் சர்வதேச உணவு வகைகள் வரை பல்வேறு சுவைகளை ஒரே இடத்தில் ரசிக்கும் வகையில் பிரம்மாண்ட உணவு வளாகம் அமைக்கப்பட உள்ளது. குடும்பத்துடன் உணவருந்துவதற்கான பல்வேறு தேர்வுகளும் இதில் இடம்பெற உள்ளன.

திரைப்பட ரசிகர்களுக்காக 5 திரைகளைக் கொண்ட அதிநவீன பி.வி.ஆர். மல்டிபிளக்ஸ் திரையரங்கமும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி மக்களுக்கு நவீன திரையரங்கு அனுபவத்தை ஒரே வளாகத்தில் வழங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

திருச்சியின் பொருளாதாரத்திற்கு புதிய வேகம்!

பாரத் மால் செயல்பாட்டுக்கு வரும் நிலையில், திருச்சியின் வர்த்தகச் சூழலில் புதிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உள்ளூர் மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதுடன், வணிகம், சேவைத் துறை மற்றும் சுற்றுவட்டார பொருளாதார நடவடிக்கைகளுக்கும் ஊக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.

வளர்ந்து வரும் திருச்சியின் நகர்ப்புற முகத்தில்... புதிய அத்தியாயமாக உருவாகிறது பாரத் மால்!
கட்டுமானப் பணிகள் வேகமெடுத்து வரும் நிலையில், திருச்சி மக்களின் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரே இடத்தில் அனைத்து தேவைகளையும் இந்த பாரத் மால் நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பும் எகிறி அடித்து வருகிறது.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
திருச்சியில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘பாரத் மால்’! 3-வது அடித்தளப் பணி தொடக்கம் — என்னென்ன வசதிகள் தெரியுமா?
PulseNews சுருக்கம்

திருச்சியில் வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கின் புதிய அடையாளமாக அமையவுள்ள 'பாரத் மால்' கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அப்பகுதி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையும் இந்த பிரம்மாண்ட வணிக வளாகத்தின், நிலத்தடி கட்டுமானப் பணிகள் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன.

சுமார் 5.15 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் பாரத் மாலின் மூன்றாவது அடித்தளப் பணிகளை கட்டுமானக் குழுவினர் தற்போது தொடங்கியுள்ளனர்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business