PulseNews
வணிகம்

'காய்கறி' என ஆன்லைனில் விற்கப்பட்ட 'வி@ஷம்'; ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்ட முன்னணி நிறுவனங்கள் - வெளியான டாப் அலர்ட்!

கர்நாடக மாநிலத்தில் ஆன்லைன் உணவு விநியோகத்தில் இதுவரை இல்லாத ஒரு அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது. மனிதர்கள் சாப்பிடக் கூடாத, கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்த ஊமத்தங்காய் மற்றும் அதன் விதைகளைத் தங்களது செயலிகளில் காய்கறி மற்றும் உணவுப் பொருட்கள் என்ற பிரிவின் கீழ் பட்டியலிட்டு விற்பனை செய்ததற்காக முன்னணி நிறுவனங்களான அமேசான், ஸ்விகி, இன்ஸ்டாமார்ட், ப்ளிங்இட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகியவற்றின் உணவு உரிமங்களை கர்நாடக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் மீதான இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நடத்திய தீவிர சோதனையில், இந்த ஆன்லைன் தளங்கள் தங்களது கிடங்குகளில் ஊமத்தங்காய்களைச் சேமித்து வைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால், இந்த நச்சுப் பழங்கள் அடைக்கப்பட்ட பாக்கெட்டுகளில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் போலி உரிம எண்கள் அச்சிடப்பட்டிருந்தன . சில வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் ஆர்டர் செய்த பொருட்களுடன் இந்த ஊமத்தங்காய் இலவசப் பொருளாகவும் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கர்நாடக அரசு இந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான கிடங்குகளுக்கு உடனடியாகச் சீல் வைத்தது. மேலும், ஆன்லைன் தளங்களில் இருந்து ஊமத்தங்காய் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும், விற்பனைப் பட்டியல்களையும் உடனடியாக நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நச்சுப் பழங்களை ஆன்லைன் நிறுவனங்களுக்கு விநியோகம் செய்த மொத்த வியாபாரிகளின் உரிமைகளும் முடக்கப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படியான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன . கடவுள் வழிபாட்டிற்கு என விற்கப்படுவதாக கூறப்பட்டாலும் இந்த ஊமத்தங்காயில் 'அட்ரோபின்' மற்றும் ' ஸ்கோபோலமைன் ' உள்ளிட்ட ஆபத்தான நச்சு வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன. இதனைத் தவறுதலாக உணவாக உட்கொண்டால் கடுமையான மனநல பாதிப்பு, பக்கவாதம், மாரடைப்பு, கோமா மற்றும் மரணம் கூட நிகழலாம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய ஆபத்தான ஒரு பொருளைப் பண லாபத்திற்காகப் பொறுப்பற்ற முறையில் ஆன்லைனில் காய்கறி போல விற்றதே இந்த கடுமையான தடைக்கு முக்கியக் காரணம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அண்மையில் சாதாரண இனிப்பு வகைகளை அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் என விற்க அமேசான் அனுமதி அளித்ததற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் உயிருக்கே உலை வைக்கும் கொடிய விஷம் கொண்ட பொருள் ஒன்று இவ்வளவு நாட்கள் சாதாரண காய்கறி என்ற வகைப்படுத்தலில் விற்கப்பட்ட தகவல்கள் ஆன்லைன் ஆர்டர் வாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'காய்கறி' என ஆன்லைனில் விற்கப்பட்ட 'வி@ஷம்'; ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்ட முன்னணி நிறுவனங்கள் - வெளியான டாப் அலர்ட்!
PulseNews சுருக்கம்

கர்நாடகாவில் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் மீது உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மனிதர்கள் உட்கொள்ளக் கூடாத நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் மற்றும் அதன் விதைகளை, காய்கறி மற்றும் உணவுப் பொருட்கள் பிரிவின் கீழ் விற்பனை செய்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அமேசான், ஸ்விகி இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகிய முன்னணி நிறுவனங்களின் உணவு உரிமங்களை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business