கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி: பயனாளிகள் பட்டியல் இணையத்தில் வெளியீடு; விவசாயிகள் செக் பண்ணுங்க
கூட்டுறவு நிறுவனங்களில் 2025 மே மாதம் முதல் 2026 பிப்ரவரி மாதம் வரை பயிர்க்கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளின் ரூ.5,932 கோடி கடனைத் தள்ளுபடி செய்து, அதற்கான மாவட்ட வாரியான பயனாளிகள் பட்டியல் மற்றும் தள்ளுபடித் தொகை விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகள் தங்களது பெயர்கள் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்டத் தொகையை இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும், இந்த மாவட்ட வாரியான பட்டியல்கள் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) அலுவலகங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களிலும் நேரில் பார்வையிடும் வகையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பெயர் மற்றும் தள்ளுபடி விவரங்களை www.kooturavu.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று நேரடியாகக் கண்டறியலாம் என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் அந்தந்த கூட்டுறவு வங்கிகளிலும் இந்த பட்டியல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு விவசாயிககளுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக வழங்கப்பட்ட பயிர்க்கடன்களை தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்து அறிவித்தது. இதன்படி, கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் முதல் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 14 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளின் 5 ஆயிரத்து 932 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் பெயர், தள்ளுபடி செய்யப்பட்ட தொகை உள்ளிட்ட விவரங்கள் வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடப்பட்டுள்ளன. விவசாயிகளின் வசதிக்காக மாவட்ட வாரியான இரு பட்டியல்கள் கூட்டுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்கள் பெயர் மற்றும் தள்ளுபடி விவரங்களை www.kooturavu.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று சரிபார்த்துக்கொள்ளலாம். ஆன்லைன் மூலம் சரிபார்க்க முடியாத கிராமப்புற விவசாயிகளுக்காக, தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களிலும் இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி திட்ட பயனாளிகளின் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள இந்த அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் தங்களது பெயர்கள் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் 2025 மே மாதம் முதல் 2026 பிப்ரவரி மாதம் வரையிலான காலத்தில் பயிர்க்கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளின் ரூ.5,932 கோடி மதிப்பிலான கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான மாவட்ட வாரியான பயனாளிகளின் பட்டியல் மற்றும் கடன் தள்ளுபடி விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
விவசாயிகள் தங்களது பெயர்கள் மற்றும் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொகையினை இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம். மேலும், இந்த மாவட்ட வாரியான பட்டியல்களை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் நேரடியாகச் சென்று விவசாயிகள் தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.