PulseNews
வணிகம்

Property Registration : நிலம், வீடு பத்திரப்பதிவு செய்ய போறீங்களா.? காத்திருந்த மக்களுக்கு சூப்பர் செய்தி சொன்ன பதிவுத்துறை

சுப முகூர்த்த நாளில் பத்திர பதிவு

சொந்தமாக நிலம் வாங்க வேண்டும், வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அந்த வகையில் சிறுக சிறுக சேமித்த பணத்தில் வீடுகள் வாங்குவார்கள். அந்த வகையில் பத்திர பதிவு செய்யும் போது பல விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பத்திர பதிவு செய்ய முன் கூட்டியே டோக்கன்கள் வாங்க வேண்டும். இல்லையென்றால் பத்திர பதிவு செய்ய இயலாது. எனவே பத்திர பதிவு செய்வதற்கு முன்னதாக எந்த தேதியில் முன்பதிவு செய்யப்போகிறோம் என பதிவுத்துறையிடம் டோக்கன் பெற வேண்டும். அந்த வகையில் இந்த பத்திர பதிவு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சுப முகூர்த்த நாட்களில் ஏராளமானோர் தங்கள் வீடு அல்லது நிலத்தை பதிவு செய்ய திட்டமிடுவார்கள்.

ஆவனி சுபமுகூர்த்த நாள்

ஆனால் அன்றைய தினம் அதிகமான கூட்டம் இருப்பதால் பத்திர பதிவு செய்ய டோக்கன் கிடைக்காது. எனவே சிறுக சிறுக சேமித்த பணத்தில் நிலமோ அல்லது வீடோ வாங்குபவர்கள் சுப முகூர்த்த நாளில் பத்திர பதிவு செய்ய முடியாமல் வேதனை அடைவார்கள். இந்த நிலையில், சுப முகூர்த்த நாளில் பத்திர பதிவு செய்பவர்களுக்கு வசதியாக கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான 31.08.2026 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

கூடுதல் டோக்கன்- பதிவுத்துறை அறிவிப்பு

எனவே, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான 31.08.2026 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Property Registration : நிலம், வீடு பத்திரப்பதிவு செய்ய போறீங்களா.? காத்திருந்த மக்களுக்கு சூப்பர் செய்தி சொன்ன பதிவுத்துறை
PulseNews சுருக்கம்

நிலம் அல்லது வீடு வாங்கும் பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்வதற்கு முன்பாக ஆன்லைன் மூலம் டோக்கன் முன்பதிவு செய்வது கட்டாயமாகும். இந்த நடைமுறையைப் பின்பற்றினால் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய முடியும் என்பதால், பொதுமக்கள் உரிய தேதியைத் திட்டமிட்டு முன்பதிவு செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சொந்தமாக வீடு மற்றும் நிலம் வாங்கும் மக்களின் கனவை நனவாக்க பதிவுத்துறை பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. இதன்படி, பத்திரப்பதிவு செய்ய விரும்பும் அனைவரும் முன்னதாகவே டோக்கன்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business