விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது, வேலை நாடுநர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. அதன்படி , படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 22.08.2026 அன்று சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், விருதுநகர்-சிவகாசி மெயின் ரோடு, ஆமத்தூரில் அமைந்துள்ள ஏ.ஏ.ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் எம்ஆர்எஃப் டயர்ஸ், ஹுண்டாய் மோட்டார்ஸ், வி.வி.வி & சன்ஸ் எடிபில் ஆயில்(இதயம்), ராயல் என்பீல்டு, மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடல், டிவிஎஸ் ஸ்ரீசக்ரா, அடையார் ஆனந்தபவன், சென்டர்சாஃட் டெக்னாலஜிஸ், சால்காம்ப் போன்ற 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்கள தெரிவு செய்யவுள்ளார்கள்.

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 22.08.2026 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேர்காணலில் கலந்து கொள்ளவதற்கு முன்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு இணையத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு சுய விவரச் சான்றிதழ் (RESUME) அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் முகாமிற்கு பதிவு செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைப்பேசி எண்ணிற்கு (9360171161) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வேலை தேடும் இளைஞர்களுக்காக மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
இந்த முகாம் வரும் 22.08.2026 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது. தகுதியுள்ள வேலை நாடுநர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா கேட்டுக்கொண்டுள்ளார்.