சென்னை விமான நிலையம், சிறுசேரி ஐ.டி பார்க்... விஜய் தொடங்கி வைத்த ஏ.சி பஸ் புதிய வழித் தடங்கள் பட்டியல்
சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நொக்கில், 2-ம் கட்டமாக 750 ஏ.சி. மின்சார பஸ் சேவையை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சியில், சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் மின்சார வாகனங்கள் அரசு சார்பில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் சென்னை வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்டிரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 ஆகிய 5 பணிமனைகளில் இருந்து முதல் கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில் 625 தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, தற்போது 2-வது கட்டமாக, மேலும், 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகள் இயக்கம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த மின்சார பேருந்தகள் இயக்கத்தை முதல்வர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள், ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே.நகர் மற்றும் அய்யப்பன்தாங்கல் ஆகிய 7 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட உள்ளது. மத்திய பணிமனையில் இருந்து இயக்கப்படும் 50 தாழ்த்தள குளிர்சாதன மின்சார பேருந்துகளின் வழித்தடங்கள்👇 #MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #Chennai | #NammaChennai | #NammaBus @CMOTamilnadu | @TamilanParthib1 | @arasubus | @TNDIPRNEWS pic.twitter.com/eHHopdVzBy — MTC Chennai (@MtcChennai) August 25, 2026 இந்நிலையில் புதிதாக இயக்கப்படும் 130 தாழ்த்தள மின்சார குளிர்சாதன பேருந்துகளுக்கான வழித்தடங்களை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. இதன்படி மத்திய பணிமனையில் இருந்து இயக்கப்படும் 50 தாழ்த்தள குளிர்சாதன மின்சார பேருந்துகள், கவியரசு கண்ணதாசன் நகர், தீவுத்திட்ல், ஜே.ஜே.நகர் கிழக்கு, தீவுத்திடல் – கிளாம்பாக்கம், பெரம்பூர் – அண்ணா சதுக்கம், அண்ணா சதுக்கம் – பட்டாபிராம், பாரிமுனை – குன்றத்தூர், சென்ட்ரல் – திருப்போரூர், தி நகர் – திருவேற்காடு, அண்ணா சதுக்கம் – பூவிருந்தவல்லி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது. Routes of 80 Low Floor Air-conditioned electric buses to be operated from Alandur Depot👇 #MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #Chennai | #NammaChennai | #NammaBus @CMOTamilnadu | @TamilanParthib1 | @arasubus | @TNDIPRNEWS pic.twitter.com/nUBcNda3jL — MTC Chennai (@MtcChennai) August 25, 2026 தொடர்ந்து ஆலந்தூர் பணிமனையில் இருந்து இயக்கப்படும் 80 தாழ்த்தள குளிர்சாதன மின்சார பேருந்துகள், ஏர்போர்ட் – கிளாம்பாக்கம், ஏர்போர்ட் – சிறுச்சேரி ஐ.டி.பார்க், ஏர்போர்ட் – அடையாறு பேருந்து நிலையம், செங்குன்றம் – கிண்டி தொழிற்பூங்கா, கோயம்பேடு – சிறுச்சேரி ஐ.டி பார்க், அம்பத்தூர் தொழிற்பேட்டை – வேளச்சேரி, பல்லாவரம் – செங்கல்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றம் – சிறுச்சேரி ஐ.டி.பார்க், பல்லாவரம், மாமல்லபுரம், கிண்டி தொழிற்பேட்டை – செம்மஞ்சேரி, திரு.வி.க நகர் – கிண்டி திரு.வி.க பூங்கா, தி நகர் ஏ,ஜி.எஸ் அலுவலக குடியிருப்பு, கோயம்பேடு – கிளாம்பாக்கம், தாம்பரம் மேற்கு – சிறுச்சேரி ஐ.டி. பார்க் ஆகிய வழித்தடங்களில் இயக்கும்.

சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், 750 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்து சேவைகளின் இரண்டாம் கட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் சென்னை விமான நிலையம் மற்றும் சிறுசேரி ஐ.டி பார்க் உள்ளிட்ட பல்வேறு புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி அரசு சார்பில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 5 பணிமனைகளிலிருந்து 625 மின்சார பேருந்துகள் 697 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதல் கட்டமாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.