SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, நாடு முழுவதும் மொத்தம் 1,538 ஜூனியர் அசோசியேட் (Junior Associate - Customer Support and Sales) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்ப தேதி

இந்த வேலைவாய்ப்பிற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in அல்லது sbi.co.in/careers என்ற இணையப் பக்கத்திற்குச் சென்று மட்டுமே தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

கல்வித்தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

தேர்வு முறை

ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட நடைமுறைகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:

முதல்நிலைத் தேர்வு

முதன்மைத் தேர்வு

உள்ளூர் மொழித் தேர்வு

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 28 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி இடஒதுக்கீடு கோரும் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும். எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு உண்டு.

முதல்நிலைத் தேர்வு மதிப்பெண்கள்

இது 100 மதிப்பெண்களுக்கான கொள்குறி வகை தேர்வாகும். ஆங்கில மொழி, நியூமெரிக்கல் எபிலிட்டி மற்றும் ரீசனிங் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். தேர்வுக்கான மொத்த கால அளவு 1 மணி நேரம். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும்.

முதன்மைத் தேர்வு

இது 200 மதிப்பெண்களுக்கான தேர்வாகும். பொது மற்றும் நிதி விழிப்புணர்வு, பொது ஆங்கிலம், குவாண்டிடேட்டிவ் ஆப்டிடியூட், ரீசனிங் மற்றும் கணினி அறிவு ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் இடம்பெறும். இதற்கான கால அளவு 2 மணி 40 நிமிடங்கள் ஆகும்.

உள்ளூர் மொழித் தேர்வு

குறிப்பிட்ட மாநில காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள், அந்த மாநிலத்தின் உள்ளூர் மொழியை நன்றாக எழுத, படிக்க, பேச மற்றும் புரிந்துகொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கான தனித் தேர்வும் நடத்தப்படும்.

ஊதிய விவரம்

இந்த ஜூனியர் அசோசியேட் பணிக்கான தொடக்க அடிப்படை ஊதியம் ரூ.19,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதன் ஊதிய விகிதம் ரூ.17,900-1000/3-20,900-1230/3-24,590-1490/4-30,550-1730/7-42,600-3270/1-45,930-1990/1-47,920 என்ற அடிப்படையில் இருக்கும். மேலும், அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட இதர சலுகைகளும் வங்கி விதிமுறைகளின்படி வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கட்டணம், மாநில வாரியாக பிரிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி உள்ளிட்ட முழுமையான விவரங்களை விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

இதுதொடர்பான அறிவிக்கையை தேர்வர்கள் https://sbi.bank.in/webfiles/uploads/files_2627/08/JA_2026_Backlog_Detailed_Advt_ENG.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் நாடு முழுவதும் காலியாக உள்ள 1,538 ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான sbi.co.in அல்லது sbi.co.in/careers வாயிலாக மட்டுமே விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும், அரசு விதிமுறைப்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வுகள் அளிக்கப்படும். தேர்வு முறையானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் உள்ளூர் மொழித் தேர்வு ஆகிய நிலைகளைக் கொண்டது. இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ரூ.19,900 தொடக்க அடிப்படை ஊதியமாக வழங்கப்பட உள்ளது. கூடுதல் விவரங்களை வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பதாரர்கள் தெரிந்துகொள்ளலாம்.