பெட்ரோல் பங்குகளில் G-Pay உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிறுத்தம்?.. அதிர்ச்சி செய்தி!!
Petrol Bunk UPI Payment: சைபர் க்ரைம் புகார்களின் பேரில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படுவதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆன்லைன் மற்றும் யூபிஐ (UPI) பணப்பரிவர்த்தனைகளை தற்காலிகமாக நிறுத்த பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது. முழு கணக்கையும் முடக்குவதற்குப் பதிலாக, சர்ச்சைக்குரிய தொகையை மட்டும் பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சைபர் க்ரைம் புகார்கள் காரணமாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ஜி-பே உள்ளிட்ட டிஜிட்டல் மற்றும் யூபிஐ பணப்பரிவர்த்தனைகளைத் தற்காலிகமாக நிறுத்த பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
வங்கி கணக்கு முழுவதையும் முடக்குவதற்குப் பதிலாக, சர்ச்சைக்குரிய குறிப்பிட்ட தொகையை மட்டும் பிடித்தம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சிக்கலுக்குத் தீர்வு காணும் நோக்கில் இத்தகைய முடிவை எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.