அரிசி, பருப்பு, சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு இந்திய கம்யூ. வலியுறுத்தல்
“அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நியாய விலை கடைகள் மூலமாக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும்” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
விலை உயர்வைச் சமாளிக்க அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்றும் அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது.