மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் சட்டசபையில் இன்று தொடங்குகிறது
தமிழக சட்டசபை மானிய விவாதம் இன்று தொடக்கம்: துறை வாரியாக மானியக் கோரிக்கைகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறுகின்றன. Tamil Nadu Assembly grant debates begin: Department-wise discussions on revenue, disaster management, health and public welfare grants resume after four-day break.

தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இன்று மீண்டும் தொடங்குகின்றன. நான்கு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நடைபெறவுள்ள இந்த விவாதங்களில், பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் குறித்து இந்த அமர்வில் முக்கிய விவாதங்கள் நடைபெறுகின்றன. துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்த ஆலோசனைகளில் பங்கேற்கின்றனர்.