“முன்னறிவிப்பின்றி 4 மடங்கு சொத்துவரி உயர்வு!”.. மாநகராட்சியின் விளக்கத்திற்கு ஆதாரங்களுடன் சென்னைவாசிகள் கொந்தளிப்பு!!
Chennai Property Tax Hike: சென்னையில் சொத்துவரி உயர்த்தப்படவில்லை என மாநகராட்சி அளித்த விளக்கத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பைப் பதிவிட்டு வருகின்றனர். முன்னறிவிப்பின்றி 300% முதல் 400% வரை வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், தவறான மதிப்பீடு எனக் கூறி கடந்த அரையாண்டுக்கான நிலுவைத் தொகையையும் சேர்த்து வசூலிப்பதற்கு மக்கள் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சென்னையில் சொத்துவரி உயர்த்தப்படவில்லை என மாநகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, பொதுமக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னறிவிப்பின்றி தங்களின் சொத்துவரி 300 முதல் 400 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தவறான மதிப்பீடு எனக் கூறி, கடந்த அரையாண்டுக்கான நிலுவைத் தொகையையும் சேர்த்து வசூலிக்க மாநகராட்சி முயற்சிப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்து, மாநகராட்சியின் விளக்கத்திற்கு எதிராக சென்னைவாசிகள் சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.