PulseNews
வணிகம்

கேள்விக்குறியாகும் அயலகக் கல்வி! -அரசு நடவடிக்கை எடுக்குமா?

அ ண்ணல் அம்பேத்கர் அயல்நாடு கல்வித் திட்டம் மூலம் வெளிநாட்டிற்குச் சென்று படிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களை பொருளாதார காரணங்களுக்காக நிராகரித்துள்ள சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று முன்னணி பல்கலைக்கழகங்களில் முதுகலை, முனைவர் மற்றும் முனைவர் பட்டத்துக்குப் பின்பான ஆய்வு (Post#doctoral Research) போன்ற உயர்கல்வியைத் தொடர விரும்புகையில், அவர்களின் கனவு பொருளாதார சூழ்நிலை காரணமாக, தடைபட்டுப் போகிறது. இதை மனதில் வைத்துக்கொண்டு தி.மு.க. அரசு 2023-ஆம் ஆண்டு, தகுதியுள்ள மாணவர்களை வெளிநாடுகளில் சென்று படிக்கும்வகையில், ஒரு ஆண்டுக்கு ரூ.36 லட்சம் வீதம் ஒவ்வோராண்டும் நிதி ஒதுக்கியது. இதனால் 2023-ஆம் ஆண்டு 66 பேரும், 2024-ஆம் ஆண்டு 150 பேரும், 2025-ஆம் ஆண்டு 174 பேரும் கல்வி கற்க வெளிநாடு சென்றனர். அந்தவகையில் கடந்தாண்டு 62 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, மாணவர்கள் வெளிநாடு களிலுள்ள பல்கலைக் கழகத்தில் படிக்கும் கனவு நனவாகியது. அதேபோல கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு இருமடங்கு நிதியை உயர்த்தி 131 கோடியாக ஒதுக்கியுள்ளது தற்போதைய அரசு. ஆனாலும் 316 மாணவர்களின் அயலகக் கல்விக்கனவு கேள்விக்குறியாகவுள்ளது . உலகத்திலுள்ள தலைசிறந்த பல்கலைக் கழகங்களில் பயிலுவதற்காக இந்தாண்டு அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 14-ஆம் தேதி அதற்கான விண்ணப்பத்தை வெளியிட்டு அதன்மூலமாக 500 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூலை 29-ஆம் தேதி 316 மாணவர்களைத் தேர்வுசெய்தனர். பின் விசாவுக்கு விண்ணப்பித்தபோது மாணவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு சேர்க்கையை ரத்து செய்துள்ளனர். எதனால்? வெளிநாட்டுக்கு கல்வி கற்கச் செல்கின்ற மாணவர்களின் வங்கிக் கணக்கில் இருப்புத் தொகையாக குறைந்தபட்ச நிதியாக ரூ.80 லட்சம் வரை இருந்தால் தான் அவர்களுக்கு கல்வி உறுதிசெய்யப்ப டுகிறது. ஆனால் தமிழகத்திலிருந்து வருகின்ற பட்டியலின மாணவர்களுக்கு இருப்புத் தொகை ஒரு வருடத்திற்கே 36 லட்சம்தான் அரசு ஒதுக்குகிறது. அந்தத் தொகையும் படிப்படியாகப் போடப்படுவதால் இங்கு படிக்கவரும் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தமுடியாமல், பணத்திற்காக வேறு வேலைதேடும் சூழ்நிலை உருவாகிறது. இவர்களால் படிப்பதிலும், ஆராய்ச்சி செய்வதிலும் கவனம்செலுத்த முடிவதில்லை. இதனால் எங்களின் பல்கலைக்கழக தரம் குறைய வாய்ப்புள்ளது என்று நிராகரித் துள்ளனர். இந்த நிராகரிப்பு தமிழகத்திற்கு மட்டும்தானா என்று பார்த்தால் இல்லை. கர்நாடகா, மகாராஷ்டிரா மாநில மாணவர்களையும் நிராகரித்துள்ளனர். ஆனால் அவர்களின் விசாவிற்கு பரிந்துரை செய்யப்படும் என்று சொல்லும் அந்நாடுகள், தமிழகத்திற்கு மட்டும் பரிந்துரைகூட இல்லாமல் முழுமையாக நிராகரித்துள்ளனர். கர்நாடகா, மகாராஷ்டிர மாநிலங்களில் ஒரு மாணவருக்கு வருடத்திற்கு 70 லட்சம் வழங்கப்படுகிறது. ஆகையால் கூடுதலாக 10 லட்சம் அவர்களால் தயார் செய்யமுடிகிறது. அதனால் அவர்களை பரிந்துரை செய்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் வெறுமனே 36 லட்சம்தான் வழங்கப்படுகிறது. இந்த திட்டமே ஏழை எளிய மாணவர்களுக்கான திட்டம், அதுவும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர் களின் கனவு நனவாகவே இந்த திட்டம் என்கிறார்கள். ஆனால் இப்படி பொருளா தாரத்தில் நலிவடைந்த இந்த மக்களுக்கு வங்கியில் இத்தனை லட்சம் இருப்பு வைப்பதென்பது சாத்தியமில்லை. சென்ற ஆண்டு வழங்கப்பட்ட 36 லட்சத்தோடு கூடுதலாக தாட்கோ லோன் மூலாக 20 லட்சம் அரசே லோன் பெற்றுக்கொடுத்தது. மீதமுள்ள பணத்திற்கு இவர்கள் எங்கே போவார்கள் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த சிக்கலை முன்வைத்தே தமிழக மாணவர்களின் விசாவை முழுமையாக நிராகரித்துவிட்டது. 316 மாணவர்களில் யூ.கே.வுக்கு மட் டுமே 302 பேர் தேர்வாகியுள்ள னர். அயர்லாந்து நாட்டுக்கு 2 மாணவர்கள். மாணவர்களுக்கான இறுதித் தேர்வை ஜூலை 29-ஆம் தேதி மேற்கொண் டனர். ஆனால் அய லகக் கல்வி தமிழக மாணவர்களை ஜூலை 13-ஆம் தேதி யே நிராகரித்துள் ளது. நிராகரிப்பை அறிவித்து 16 நாள் கழித்துதான் இந்த அரசு ஒரு மாணவருக்கு ஆண்டிற்கு 36 லட்சம் என்று அறிவித்துள்ளது. அரசு வேண்டுமென்றே இப்படிச் செய்துள்ளதா?, இல்லை தெரியாமல் செய்துள்ளதா? என்ற கேள்வியெழுகிறது. இதுபோக, தற்போது வெளிநாடுகளில் படித்துவரும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு இந்தாண்டிற் கான நிதியும் கொடுக்காமல் இருப்பதால் அவர்களின் கல்வியும் சிக்கலாகியுள்ளது. அதையும் உடனடியாக மாணவர்களுக்கு வழங்க அரசு முன்வரவேண்டும். மேலும் மற்ற மாநிலங்களைப் போன்று நிதியை உயர்த்தி தற்போதுள்ள 316 மாணவர்களின் கல்வியையும் உறுதிசெய்யவேண்டும். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 316 மாணவர்களுக்கு நீதி கிடைக்காவிடில் சமூகநீதி அரசு என்று பெயர்சூட்டி என்ன பயன்? -சே படம்: ஸ்டாலின்

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கேள்விக்குறியாகும் அயலகக் கல்வி! -அரசு நடவடிக்கை எடுக்குமா?
PulseNews சுருக்கம்

அண்ணல் அம்பேத்கர் அயல்நாடு கல்வித் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் உயர்கல்வி கற்க விண்ணப்பித்த தமிழ்நாட்டு மாணவர்கள், பொருளாதார காரணங்களைக் காட்டி நிராகரிக்கப்பட்டுள்ளனர். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் முன்னணி பல்கலைக்கழகங்களில் முதுகலை, முனைவர் மற்றும் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுகளை மேற்கொள்ள விரும்பினாலும், நிதி நெருக்கடியால் அவர்களின் கல்வி கனவு தடைபடுகிறது. எனவே, அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business