Minister Keerthana: "பல இடங்களில் சிப்காட் பொட்டல்காடாகத்தான் உள்ளது.." திமுக-வை விளாசிய அமைச்சர் கீர்த்தனா

சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கேஎன் நேருவின் கேள்விக்கு பதிலளித்து தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பதிலளித்துப் பேசினார்.

மணப்பாறை சிப்காட்:

அப்போது, அவர் பேசியதாவது, "தொழில்பூங்கா (மணப்பாறை) 1097.86 ஏக்கரில் ஆரம்பித்துள்ளார்கள். பல வருடங்கள் ஆகியுள்ளது. அங்கே 4 நிறுவனங்கள் மட்டுமே இப்போது வரை உள்ளது. அதில் 32 தொழிற்சாலைகள் அமைப்பதற்கு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களுடன் நாம் ஆய்வு நடத்தினோம். அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் தண்ணீர் அங்கே இல்லை, சாலை வசதி இல்லை, தெருவிளக்குகள் இல்லை, சரியான பேருந்து வசதி அங்கே இருக்கும் மக்கள் சிப்காட்டிற்கு வர முடியாத நிலைதான் உள்ளதாக பல கோரிக்கைகள் வைத்தார்கள்.

நீர், சாலை வசதி:

அதற்கு ஏற்றாற்போல, நீர் வழங்குவதற்காக 1.6.2026 காவிரி நீர் வழங்கல் திட்டத்தின்கீழ் சோதனை ஓட்டம் செய்து அதில் கண்டறியப்பட்ட குறைகளை திருத்தி 7.6.2026 நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைவருக்கும் நீர் வழங்கியிருக்கிறோம்.

இரண்டாவது முறையாக டிஎன்பிஎல் மூலமாக நீர் வழங்கப்பட்டுள்ளது. சாலை வசதி அங்கே உள்ள 2 முதலீட்டாளர்கள் கேட்டிருந்தனர். சாலை வசதிக்கான ஒப்பந்தம் 2.6.2026 அன்று ஒதுக்கீடு செய்யப்பட்டு நாளை ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் சாலை வசதி செய்யப்பட உள்ளது.

இது மட்டுமின்றி தெரு விளக்குகளும் இதே ஒதுக்கீட்டில் செய்யப்போகிறோம். இதைத் தவிர அங்கே உள்ள ஒரு பெப்சிகோ நிறுவனம் டிடிசிபி அனுமதியில்லாமல் இருந்தார்கள். அவர்களுக்கு உடனடியாக நாம் செய்து கொடுத்துள்ளோம். பேருந்து வசதியில்லை என்று பொதுமக்கள் கேட்டிருந்தனர்.

மின் தேவை:

அதற்கான வசதி ஏற்படுத்துவதற்காக டிஎன்எஸ்டிசி-க்கு கடிதம் எழுதி அதற்கான சேவைகளும் தொடங்கியுள்ளோம். அங்கே சிசிடிவி கேமராவே கிடையாது. அங்கே துணை மின்நிலையமே கிடையாது. தொழில் முதலீட்டாளர்கள் கேட்பது துணை மின்நிலையம் இல்லாமல் எப்படி தொழில் ஆரம்பிக்க முடியும்? அதற்காக தொழிற்சாலைகளின் எதிர்கால மின்தேவையை கருதி 110 கிலோவாட் துணை மின் நிலையம் அமைக்க நிலம் கண்டறியப்பட்டு, அதற்கான தானப்பத்திரமும் செய்யப்பட்டுள்ளது.

பொட்டல்காடுகள்:

இத்தனை குறைகளும் உள்ள சிப்காட் மணப்பாறை சிப்காட். பல இடங்களில் சிப்காட் பொட்டல் காடாகத்தான் உள்ளது. சென்று பார்த்தால் நிலம் மட்டும் வாங்கி ஒதுக்கி வைத்துள்ளனர். தொழில்கள் ஏதும் அங்கு வரவில்லை. தருமபுரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினரே அதை ஏற்றுக்கொள்வார்கள். அதை மாற்றி ஆய்வு செய்து, ஒப்பந்தம் விடுத்து அதற்கான பணிகளை முதலமைச்சர் மூலமாக செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாட்டின் நிதிநிலை மிகவும் மோசமான சூழலில் இருக்கும் நிலையில், தொழில்துறை மூலமாக அதை சரி செய்வதற்கான பணிகளை முதலமைச்சர் விஜய் தீவிரப்படுத்தியுள்ளார். கடந்த கால ஆட்சியில் முதலீடுகள் முறையாக ஈர்க்கப்படவில்லை என்றும், ஈர்க்கப்பட்ட முதலீடுகள் முறையாக வடிவம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், மணப்பாறை சிப்காட் பூங்காவில் நிலவும் அடிப்படை வசதி குறைபாடுகள் குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்தார். 1097.86 ஏக்கரில் அமைக்கப்பட்ட இந்தத் தொழிற்பேட்டையில் போதிய சாலை, நீர் மற்றும் பேருந்து வசதிகள் இல்லாததால் முதலீட்டாளர்கள் சிரமப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த கால ஆட்சியில் பல இடங்களில் சிப்காட் தொழிற்பேட்டைகள் வெறும் பொட்டல்காடுகளாகவே விடப்பட்டதாக திமுக-வை அவர் சாடினார். தற்போது தண்ணீர் வழங்கல், சாலை மேம்பாடு, தெருவிளக்குகள் மற்றும் 110 கிலோவாட் துணை மின்நிலையம் அமைப்பதற்கான பணிகளை முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.