மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் சேவை செப். 28 வரை நீட்டிப்பு: பயணிகளுக்கு மகிழ்ச்சி!

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள்.

சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். குறிப்பாக ரயில் பயணிகளுக்கு ஏற்றார்போல் ரயில் சேவை நேரங்களை அவ்வப்போது மாற்றியமைத்து வருகிறது ரயில்வே நிர்வாகம்.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திரச் சிறப்பு ரயில் சேவை செப்டம்பா் 28 வரை நீட்டிக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திரச் சிறப்பு ரயில் சேவை செப்டம்பா் 28 வரை நீட்டிக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருநெல்வேலியில் இருந்து செப்டம்பா் 6 முதல் 27-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்குப் புறப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06030) மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து

செப்டம்பா் 7 முதல் 28 வரை திங்கள்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06029) மறுநாள் காலை 8.05 மணிக்கு திருநெல்வேலி நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, கோவை, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி, பாவூா்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் மற்றும் திருநெல்வேலி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ரயில்வே தினமும் 19,000 ரயில்களை இயக்குவதன் மூலம் நாள்தோறும் சுமார் 4 கோடி மக்கள் பயனடைகின்றனர். தொலைதூரப் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் இத்தகைய ரயில் சேவைகளை, பயணிகளின் வசதிக்காக நிர்வாகம் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.