PulseNews
வணிகம்

“மு.க.ஸ்டாலின் தான் முதன் முதலாக குரல் கொடுத்தார்” - பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு!

தமிழக சட்டமன்ற பேரவையின் தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அது மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கூட்டத்தொடரின் 7ஆம் நாளான இன்று (12-08-26) நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அதன் பின்பு அந்த தீர்மானத்தின் மீது பொது விவாதம் நடத்தப்பட்டு குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த குரல் வாக்கெடுப்பில், திமுக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிக்க, அதிமுக, பா.ஜ.க, பா.ம.க ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக பெரும்பான்மை எண்ணிக்கை இருந்ததால் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக அந்த தீர்மானத்தின் பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “உலகத்தில் பொருளாதாரத்தில் நம்பர் ஒன் நாடு, அமெரிக்கா. அங்கு மக்கள் தொகையின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய விகிதாசாரத்தை உருவாக்கவில்லை. 20 கோடியில் இருந்து 50, 60 கோடி ஆனாலும் இன்று வரை அதே பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் இருக்கிறார்கள். 5,6 வட மாநிலங்கள் சேர்ந்தால் ஒரு பிரதமரை உருவாக்க முடியும் என்ற நிலை இன்று வரை இருக்கிறது. அதை மாற்றப்பட வேண்டும். தென்னிந்தியாவில் ஏன் தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும். நம்முடைய குரல் சட்டமன்றத்தில் ஒலித்தது போல ஒரு நாள் பாராளுமன்றத்தில் ஒரு பிரதமராக ஒலிக்க வேண்டும். இதற்கு தான் இந்த தீர்மானம் பொருளாதாரத்தில் மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் பாராளுமன்றத்தில் நடக்கக்கூடிய அனைத்து சட்டங்கள் ஏன் தமிழ்நாட்டுக்கு எதிராக இருக்கிறது? ஏனென்றால் நம்முடிய குரல் நம்முடைய அதிகாரம் மக்கள் தொகை அடிப்படையில் இன்று வரை செயல்பட்டு வருகிறது. இதுதான் மிகப்பெரிய பிரச்சனை. அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு இன்று வரை கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களை உயர்த்த நினைத்தார்கள், அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அதை தடுத்தி நிறுத்தினார். அதன் பிறகு வாஜ்பாய் தடுத்து நிறுத்தினார். அந்த ஜனநாயகத்தை நாங்கள் மதிக்கிறோம். இன்றைய தீர்மானம் காங்கிரஸ், பா.ஜ.க என்பது அல்ல, இந்த தீர்மானம் மாநில சுயாட்சியும், இந்திய ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவது தான். பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோர் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தியா என்கிற ஒரு நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்காகவும் சிந்தித்தார்கள். தேர்தல் காலங்களில் வெற்றி பெறுவதற்காக நாம் பல்வேறு அரசியல் களத்தில் நாம் சண்டையிடலாம். இந்த தீர்மானம் நீட்டை விட முக்கியமான தீர்மானம். ஏனென்றால் பாராளுமன்றத்தில் அதிகப்படியாக இருப்பதனால் தான் நீட்டே கொண்டு வரப்படுகிறது. இந்த தீர்மானத்திற்கு உடன்படுவதாக மு.க.ஸ்டாலின் தான் முதல் குரல் கொடுத்தார். அதில் எந்த வேறுபாடும் கிடையாது. அதை நாங்கள் ஆதரிக்கிறோம். இந்த தொகுதி மறுவரையறையால் விகிதாச்சாரம் உயர்ந்தால் இதை வரவேற்கலாமா என்ற குரல் ஏப்ரல் 26 அன்று வந்தது. அதையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார்” என்று கூறினார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“மு.க.ஸ்டாலின் தான் முதன் முதலாக குரல் கொடுத்தார்” - பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு!
PulseNews சுருக்கம்

தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை மீதான விவாதம் ஏழாம் நாளாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரின் போது, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முன்னதாக, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தான் முதன்முதலாக குரல் கொடுத்தார் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் பேசினார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business