PulseNews
வணிகம்

Book Review சேமிப்பு... முதலீடு... இலக்கு! ஶ்ரீனிவாசன் சுப்ரமணியன்

Book Review சேமிப்பு... முதலீடு... இலக்கு! ஶ்ரீனிவாசன் சுப்ரமணியன் முன்னணி விகடன் பிரசுரம், முதலீட்டு ஆலோசகர் ஶ்ரீனிவாசன் சுப்ரமணியன், நாணயம் விகடன் சேமிப்பு... முதலீடு... இலக்கு! என்கிற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளது. முதலீட்டுத் துறையை உடல் நலத்துடன் ஒப்பிட்டு, சமச்சீர் உணவைப் போல சமச்சீர் முதலீடும் அவசியம் என்பதை விளக்கியிருக்கும் விதம் அற்புதம். ஒற்றை முதலீட்டைச் சார்ந்து இருப்பதை விடுத்து, பன்முகத் தன்மையுடன் முதலீடு செய்வதே நீண்ட கால வெற்றிக்கு வழி என்பதை இந்நூல் மிகத் தெளிவாகத் தடம் காட்டுகிறது. பணத்தைச் சேமிப்பதற்கும், அதைச் செல்வமாக மாற்றுவதற்கும் இடையே உள்ள இடைவெளியை இந்நூல் மிகச்சரியாக நிரப்புகிறது. “பணத்தை நிர்வகிப்பதில் மாற்றி யோசிப்பது எப்படி?” என்ற வினாவிற்கு விடையாக இந்த நூல் அமைகிறது. முறையான சேமிப்பு, இலக்கு நோக்கிய முதலீடு, ரிஸ்க் மேலாண்மை போன்ற சிக்கலான விஷயங்களை மிக எளிமையாக விளக்கிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். நிதி மேலாண்மையை ஒரு கலையாகவும், அதே சமயம் ஒரு வாழ்வியல் ஒழுக்கமாகவும் மாற்றத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த நூல் ஒரு பயனுள்ள கையேடு. விலை ₹ 225 ( ₹ 250, 10% off) Publisher: Vikatan Publications Language : Tamil ISBN : 978-93-94265-34-9 Country of Origin : India Contact: books@vikatan.com புத்தகம் ஆர்டர் போட https://books.vikatan.com/personal-finance-and-business/semippu-muthaleedu-ilakku @@@ நூலாசிரியர் பற்றி..! ஸ்ரீனிவாசன் சுப்ரமணியன், தனிநபர் நிதியியல் நிபுணர், www.ducatz.in சென்னை மற்றும் திருப்பூரில் இயங்கி வரும் Ducatz FinServ இன் நிறுவனர் மற்றும் முதன்மை தனிநபர் நிதியியல் நிபுணர் சீனிவாசன் சுப்ரமணியன். இவர் தனிநபர் நிதி மேலாண்மையில் 15 ஆண்டு கால நிபுணத்துவம் பெற்றவர். தனிநபர் நிதி, நிதித் திட்டமிடல், காப்பீடு, பட்ஜெட், முதலீடு மற்றும் செல்வ மேலாண்மை போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் தற்போது 250-ம் மேற்பட்ட குடும்பங்களுக்கு அவர்களுடைய நிதி மேம்பாட்டிற்கு சேவை செய்து வருகிறார். தனிப்பட்ட வாடிக்கையாளர் சேவைக்கு அப்பால், சமூகத்தில் நிதி சார்ந்த விழிப்புணர்வுகளை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறார். கல்லூரி மாணவர்களுக்கு நிதியியல் சார்ந்த பட்டய வகுப்புகளை கல்லூரிகள் மற்றும் தனிப்பட்ட வகுப்புகள் மூலம் நடத்தி வருகிறார். நாணயம் விகடன் இதழில் வெளியான ஸ்ரீனிவாசன் சுப்ரமணியன் கட்டுரைகளை படிக்க https://bit.ly/4r0Mlbp ஆம்ஃபி பதிவு எண்: 64151 Ducatz Finserv ப்ளாக் எண்: 4, ஃப்ளாட் எண்: B4, Jain Green Acres, எண் 91, தர்கா ரோடு, ஜமீன் பல்லாவரம், சென்னை – 600 043, தமிழ்நாடு, இந்தியா. 📞 தொடர்புக்கு: (+91) 995 260 4444 📧 மின்னஞ்சல்: connect@ducatz.in இணையதளம்: www.ducatz.in Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது . முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது . மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது .

Estate, Market, Fund, Insurance, Loan16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Book Review சேமிப்பு... முதலீடு... இலக்கு! ஶ்ரீனிவாசன் சுப்ரமணியன்
PulseNews சுருக்கம்

முதலீட்டு ஆலோசகர் ஶ்ரீனிவாசன் சுப்ரமணியன் எழுதிய 'சேமிப்பு... முதலீடு... இலக்கு!' என்ற புத்தகம் விகடன் பிரசுரத்தின் மூலம் வெளியாகியுள்ளது. முதலீட்டுத் துறையை உடல் நலத்துடன் ஒப்பிட்டு, சமச்சீரான உணவு போலவே முதலீடுகளும் சமச்சீராக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்நூல் எடுத்துரைக்கிறது.

ஒரே முதலீட்டை மட்டும் நம்பியிருக்காமல், பல்வேறு வழிகளில் முதலீடு செய்வதன் மூலமே நீண்ட கால வெற்றி பெற முடியும் என்பதை இந்தப் புத்தகம் தெளிவாக விளக்குகிறது. நாணயம் விகடன் தளத்தில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.

மூலம்: Estate, Market, Fund, Insurance, LoanEstate, Market, Fund, Insurance, Loan-இல் முழு செய்தியைப் படிக்க →
#business