PulseNews
வணிகம்

Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு

தமிழகத்தில் ரேஷன் கடைகள்

தமிழகத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளது. இந்த ரேஷன் கடைகள் மூலம் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி,கோதுமை, சக்கரை, பாமாயில் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மானிய விலையிலும், இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடை பணி நேரமாக காலை 8.30 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படுகிறது. இதில் மதிய உணவு நேரத்தில் மட்டும் இரண்டு மணி நேரம் ஓய்வு வழங்கப்படுகிறது. எனவே ஊழியர்கள் காலை முதல் இரவு வரை ரேஷன் கடையிலேயே இருக்கும் நிலை உருவாகிறது. மேலும் வார விடுமுறையும் வெள்ளிக்கிழமை விடப்படுவதால் குடும்பத்தோடு நேரம் செலவிடுவது குறைவதாக ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

பணி நேரத்தை மாற்றுங்கள்

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு வெள்ளிக்கிழமை வேலைநாளாகவும், ஞாயிற்று கிழமை விடுமுறை நாளாகவும் உள்ளது. ஆனால், ரேஷன் கடை பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறையாகவும், ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் இருப்பதால், விடுமுறை நாட்கள் யாருக்கும் எந்தவித பயனுள்ளதாக இல்லை என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகள் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மீண்டும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் செயல்பட்டு வருகிறது.

ரேஷன் ஊழியர்கள் மன உளைச்சல்

அதன் படி,மதிய இடைவேளை நேரம் நீட்டிக்கப்பட்டு, பணி நேரம் சுமார் 12 மணி நேரமாக உள்ளது. இதனால் பணியாளர்கள் மனச்சோர்வுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் ரேஷன் கடை வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் படி ரேஷன் கடைகளில் புதிய பணி நேரமாக காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 6 மணி வரையும் செயல்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே போல விடுமுறை நாட்களையும் முதல் இரண்டு வெள்ளிக்கிழமை வேலை நாட்களாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு

இது தொடர்பாக துணைப்பதிவாளர்களுக்கு பொது விநியோக திட்ட இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் கோரிக்கை மனு தொடர்பாக ஆய்வு செய்து வார விடுமுறை, பணி நேரம் தொடர்பாக மாற்றம் செய்வவதால் ஏற்படும் சிக்கல்கள், சாதக, பாதகங்களை ஆய்வு செய்து அறிக்கையாக வழங்க உத்தரவிட்டுள்ளார். எனவே இந்த ஆய்வு அறிக்கையின் படி சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடுமுறை மற்றும் பணி நேரம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு மானிய விலை மற்றும் இலவச உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது இக்கடைகள் காலை 8.30 மணி முதல் இரவு 7 மணி வரை, மதிய இடைவேளையுடன் செயல்பட்டு வருகின்றன.

தற்போதுள்ள இந்த பணி நேரத்தில் மாற்றம் செய்வது குறித்தும், விடுமுறை அளிப்பது தொடர்பாகவும் ஊழியர்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக விரைவில் புதிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business