“இதனால் ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படப் போகிறார்கள்” - இ.பி.எஸ். பேட்டி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (30.08.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர், “அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து போயிருக்கிறது. அதற்கு என்ன தீர்வு காணப் போகிறீர்கள்? விலையைக் குறைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினால், அதற்கு உணவுத்துறை அமைச்சரிடம் இருந்து சரியான பதில் வரவில்லை. இதனால் ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படப் போகிறார்கள்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து அவரிடம் செய்தியாளர், ஒருவர் “எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்கிக் கொடுக்கும் விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, “எங்களுடைய நிலைப்பாட்டைப் பொறுத்தவரைக்கும், அவரவர் விருப்பம். நான் கார் வாங்கவில்லை; எனக்கு கார் வேண்டாம். இந்த கார் என்பது அவர்களுக்கு சொந்தமாகக் கொடுக்கப்படுவது கிடையாது. பதவியில் இருக்கிற வரைக்கும் காரை பயன்படுத்திக் கொள்ளலாம். பதவி முடிந்த பிறகு காரை திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். நான் முதலமைச்சராக இருக்கும்போதும் அரசாங்கத்துடைய காரைத்தான் பயன்படுத்தினேன். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதும் அரசாங்கத்துடைய காரைத்தான் பயன்படுத்தினேன். இப்போது எனக்குச் சொந்தமாக கார் இருப்பதால், எனக்கு அரசாங்க கார் தேவையில்லை. அதேபோல, எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரைக்கும், அவரவர் விருப்பப்படி நடந்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டேன்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர், “மு.க. ஸ்டாலினுக்குக் கொடுத்து வந்த செட் பிளஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டது தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, “இது குறித்து முதல்வர் விஜய்யைத் தான் நீங்கள் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (30.08.2026) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு குறித்து உணவுத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், அதற்கு அவர் முறையான பதிலளிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, இந்தச் சூழலால் ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று கவலை தெரிவித்தார்.