காஞ்சிபுரம் புது நகர் வளர்ச்சித் திட்டம் ரத்து: விஜய் அரசு உத்தரவு
முந்தைய தி.மு.க ஆட்சியில் வரையறுக்கப்பட்ட காஞ்சிபுரம் புது நகர் வளர்ச்சித் திட்டம் மற்றும் பாரம்பரிய மறுமலர்ச்சித் திட்டத்தை விஜய் தலைமையிலான த.வெ.க அரசு ரத்து செய்தது. 2023ல் 62.78 சதுர கி.மீ பரப்பளவில் 18 கிராமங்களை உள்ளடக்கிய புதிய நகரை வரையறுத்து அரசிதழ் வெளியிடப்பட்டது. திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, மறைமலை நகர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய புது நகர் வளர்ச்சித் திட்டங்களின் நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த கடந்த தி.மு.க ஆட்சியில் புதுநகர் வளர்ச்சி திட்டங்களானது செயல்படுத்தப்பட்டது. காஞ்சிபுரம், திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு புதுநகர் வளர்ச்சித் திட்டங்களை அன்றைய தி.மு.க அரசு செயல்படுத்தியது. அதன்படி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் இந்த திட்டங்களானது தொடங்கப்பட்டு, கருத்து கேட்பு கூட்டங்கள் முடிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதியாக் திட்ட அறிக்கை தயார் செய்யும் நிலைக்கு வந்தது. இந்த நிலையில், அதில் ஒரு திட்டத்தை த.வெ.க அரசு ரத்து செய்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம் பகுதியில் செயல்படுத்தப்பட்ட புதுநகர் வளர்ச்சித் திட்டம் மற்றும் பாரம்பரிய மறுமலர்ச்சித் திட்டத்தை தவெக அரசு ரத்து செய்துள்ளது அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு 62.78 சதுர கி.மீ பரப்பளவில் 18 கிராமங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்ட அந்த அரசிதழை ரத்து செய்து தமிழ்நாடு அரசு மீண்டும் ஒரு அரசிதழை வெளியிட்டுள்ளது. இதே போல் திருமழிசை, மீஞ்சூர் உள்ளிட்ட 6 புதுநகர் வளர்ச்சித் திட்டம் தொடர்பான அறிவிப்பும் கொள்கை விளக்க குறிப்பில் இடம்பெறவில்லை. இதன்காரணமாக அந்த வளர்ச்சி திட்டங்களின் நிலை என்ன என்பதும் கேள்வி குறியாகியுள்ளது.

தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட காஞ்சிபுரம் புது நகர் வளர்ச்சித் திட்டம் மற்றும் பாரம்பரிய மறுமலர்ச்சித் திட்டத்தை, விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தற்போது ரத்து செய்துள்ளது. 2023-ஆம் ஆண்டில் 18 கிராமங்களை உள்ளடக்கிய 62.78 சதுர கி.மீ பரப்பளவில் இந்த புதிய நகருக்கான எல்லைகள் வரையறுக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த அதிரடி முடிவால், திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, மறைமலை நகர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த புது நகர் வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடும் தற்பொழுது கேள்விக்குறியாகியுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் செயல்படுத்தப்படவிருந்த வளர்ச்சித் திட்டங்களின் எதிர்காலம் குறித்த சந்தேகங்களை இந்த நடவடிக்கை எழுப்பியுள்ளது.