விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!

2026-27 ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டு ரூ.37,959.06 கோடி வங்கிக் கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்தார்.

வங்கிகள் மூலமாக ரூ. 37,959.06 கோடி கடன்

விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (10.08.2026) வங்கிகளுக்கான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, வெளியிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவிக்கையில், மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் மாவட்ட வங்கிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக விருதுநகர் மாவட்டத்தின் 2026-27 ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், வங்கிகள் மூலமாக ரூ. 37,959.06 கோடி கடன் 2026-27 ஆண்டில் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வங்கிகள் கடன் வழங்கிட திட்டம்

மேலும், மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்ட் வங்கியுடன் இணைந்து இந்த கடன் திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாக கொண்டு, பல்வேறு துறைகளில் வங்கிகள் கடன் வழங்கிட இத்திட்ட அறிக்கையில் வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன. கடன் திட்ட அறிக்கையில் முன்னுரிமை கடன்காளான வேளாண்மைக்கடனாக ரூ.16,648 கோடியும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனக் கடனாக ரூ.7,850 கோடியும், ஏற்றுமதி தொழில் சார்ந்த கடனாக ரூ.7.0 கோடியும், கல்வி கடனாக ரூ.41.0 கோடியும், வீடுகளுக்கான கடனாக ரூ.319.0 கோடியும், சமூக கட்டமைப்பிற்கான கடனாக ரூ.4.0 கோடியும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கடனாக ரூ.5.0 கோடியும் மற்றும் இதர கடனாக ரூ.482.0 கோடியும் என ஆக மொத்தம் ரூ.25,356 கோடியும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற கடன்களான நகைக்கடன், தனிநபர் கடன், வாகனக் கடன் போன்றவற்றிற்கு ரூ.12,603 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு 18.54% கூடுதலாகும்

ஆக மொத்தம் 2026-27 ஆம் ஆண்டிற்கான வங்கிகள் மூலமாக ரூ.37,959.06 கோடி கடன் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2025-26 ஆம் ஆண்டில் ரூ.32,19 கோடி நிர்ணயிக்பட்டது. அதனை விட இவ்வாண்டு 18.54% கூடுதலாகும். வங்கிகள் பொதுமக்களின் தேவைகளையும், வளர்ச்சியினையும் கருத்தில் கொண்டு கடனுதவி வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஆனந்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிர்தௌஸ் பாத்திமா, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அமர்நாத், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →