PulseNews
வணிகம்

“செருப்பு கூட அணிய முடியாத நிலையில் இருக்கிறார்கள்” - பேரவையில் விசிக எம்.எல்.ஏ கோரிக்கை!

தமிழக சட்டமன்ற பேரவையின் தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அது மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கூட்டத்தொடரின் 7ஆம் நாளான இன்று (12-08-26) நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது காட்டுமன்னார்கோயில் தொகுதியின் விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி பேசுகையில், “சட்டமன்ற உறுப்பினர்களின் தேவையான கோரிக்கையை முன்மொழி மூலமாக உங்களிடம் ஏற்கெனவே கடிதமாக கொடுத்திருக்கிறேன். நான் 250 கி.மீ-இல் இருந்து தான் சட்டமன்றத்துக்கு வருகிறேன். பேருந்தில் வருவதற்கும், ரயிலில் வருவதற்கும் அலொன்ஸ் கொடுக்கிறீர்கள். ஆனால் எனக்கு சொந்தமாக வண்டி வாகனம் கிடையாது, வாடகை வண்டியில் தான் வருகிறேன். 40 கி.மீ சுற்றளவு தான் என்னுடைய தொகுதி. அங்கு சென்று மக்களை சந்தித்து மக்களுக்கு பணி செய்ய வேண்டிய அளவிற்கான வாகன வசதி இல்லை. அதே போல் ஒரு செயலாளரை கையில் வைத்துக் கொண்டு அவருக்கு ஊதியம் கொடுப்பதற்கு வசதி இல்லை. இப்படித்தான் இன்றைக்கு முக்கால்வாசி சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவி செய்கின்ற வகையில் அவர்களுக்கு வாகன வசதியும் மற்றவைகளும் செய்து கொடுக்க வேண்டும். காலணி அணியாத எம்.எல்.ஏ கூட இருக்கிறார்கள். காலணி அணிய முடியாத அளவுக்கு வசதி குறைவாக எம்.எல்.ஏ இங்கு இருக்கிறார்கள். அப்படி இருக்கிற சூழ்நிலையில் லஞ்ச லாவண்ய இல்லாத அரசு அமைய வேண்டுமென்றால் நம்முடைய உறுப்பினர்கள் நலமுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “சட்டமன்ற உறுப்பினர் நேர்மையும் உண்மையாகவும் நடக்கிற போது சிரமங்கள் ஏற்படலாம் என்று கருதி சொல்லி இருக்கிறார் என்று நான் கருதுகின்றேன். இதை உறுப்பினர்கள் மற்றும் தமிழக சட்டமன்ற பேரவை மேலவை முன்னாள் உறுப்பினர்கள் நற்பணி சங்கமும் கோரிக்கைகளாக வைத்திருக்கின்றார்கள். இதை முதல்வருக்கு நேரடியாக அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்வது என் கடமை. ஏனென்றால், அவருடைய கரங்கள் கிள்ளி கொடுக்கிற கரங்கள் அல்ல, அள்ளி கொடுக்கிற கரங்கள்” என்று கூறினார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“செருப்பு கூட அணிய முடியாத நிலையில் இருக்கிறார்கள்” - பேரவையில் விசிக எம்.எல்.ஏ கோரிக்கை!
PulseNews சுருக்கம்

தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை மீதான பொது விவாதத்தின் ஏழாம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய காட்டுமன்னார்கோயில் தொகுதி விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி, மக்கள் செருப்பு கூட அணிய முடியாத நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.

சட்டமன்ற உறுப்பினர்களின் தேவையான கோரிக்கைகளை முன்னரே கடிதம் மூலம் தாங்கள் சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். தமது தொகுதி மக்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து சட்டப்பேரவையில் அவர் வலியுறுத்திப் பேசினார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business