கொழும்பு - குவைத் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
கொழும்புக்கும் குவைத்துக்கும் இடையேயான விமான சேவைகள் இன்று பிற்பகல் (08) முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த விமான சேவைகளை நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. இருப்பினும்,தற்போது பதற்றமான சூழல் ஓரளவு தணிந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் த...

கொழும்பு மற்றும் குவைத் இடையிலான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இன்று (08) பிற்பகல் முதல் இந்த விமானப் போக்குவரத்து சேவைகள் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய நெருக்கடியான சூழல் காரணமாகவே குறித்த விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. தற்போது அந்தப் பதற்றமான நிலைமை ஓரளவு தணிந்துள்ளதால், மீண்டும் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.