PulseNews
வணிகம்

தவெக அரசின் 100 நாள் சாதனை: அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு தான் - ஆர்.பி.உதயகுமார் தாக்கு !

கடந்த 100 நாள் த.வெ.க அரசின் சாதனையாக அத்தியாச பொருட்கள் விலை தாறுமாறாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்..,"

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுவது குறித்தோ, அல்லது அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தோ, தவெக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் உள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். முதல்வர் விஜய் வெறும் அலங்கார வார்த்தைகள் பேசுவது மட்டுமே நல்லாட்சிக்கு அழகல்ல, விஜய்யின் சாயம் வெளுத்து வருகிறது. மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு முதல்வர் விஜய்க்கு இருப்பதை மறந்துவிட்டாரா முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு

100 நாள் சாதனை

தவெக அரசு பொறுப்பேற்ற இந்த 100 நாள் சாதனையாக அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், காய்கறி, அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் விலைகளும் கிடுகிடுவென உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. இதை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், தவெக அரசு மௌனமாக இருப்பதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாக போர் நடந்ததின் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வருவதற்குள் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது தமிழ்நாட்டு மக்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கிறது. அத்தியாவசிய தேவையாக உள்ள சர்க்கரையின் விலை வழக்கமாக ஒரு கிலோ ரூபாய் 40 முதல் அதிகபட்சமாக ரூபாய் 45 வரை விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது கடந்த 20 நாட்களில் பல மடங்கு விலை உயர்ந்து கிலோவிற்கு ரூபாய் 25 வரை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ சர்க்கரை ரூபாய் 70 முதல் 80 வரை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இன்னொருபுறம் வெங்காய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; அதன் காரணமாக வெங்காயத்தின் சில்லறை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும் கவலை அளிக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பாக மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூபாய் 35க்கு விற்கப்பட்ட நாசிக் வெங்காயம் தற்போது கிலோவிற்கு ரூபாய் 20 வரை அதிகரித்திருக்கிறது. ஒரு கிலோ ரூபாய் 55க்கு விற்கப்படுகிறது; வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூபாய் 70 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல சின்ன வெங்காயத்தின் விலையும் ஏறுமுகத்திலே இருந்து வருகிறது; ஒரு கிலோ ரூபாய் 80 வரையிலும் வெளி மார்க்கெட்டில். ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூபாய் 110 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறி விலை உயர்வு

அதோடு மற்ற காய்கறிகளின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது; நாட்டு தக்காளி ரூபாய் 20 முதல் ரூபாய் 25 வரையிலும், உருளைக்கிழங்கு ரூபாய் 15 முதல் ரூபாய் 35 வரையிலும், கேரட் ரூபாய் 50 முதல் 70 வரையிலும், பீன்ஸ் ரூபாய் 60 முதல் 80 வரையிலும், பீட்ரூட் ரூபாய் 50 முதல் ரூபாய் 60 வரையிலும், முட்டைக்கோஸ் ரூபாய் 20 முதல் ரூபாய் 25 வரையிலும், வெண்டைக்காய், கத்திரிக்காய் ரூபாய் 25 முதல் 30 வரையிலும், நாட்டு கத்திரிக்காய் ரூபாய் 30 முதல் 40 வரையிலும், பாவற்காய் ரூபாய் 40, புடலங்காய் ரூபாய் 20 முதல் ரூபாய் 30 வரையிலும், சுரைக்காய் ரூபாய் 15 முதல் ரூபாய் 25 வரையிலும், முருங்கைக்காய் ரூபாய் 25 முதல் விற்பனை செய்யப்படுகிறது. சேனைக்கிழங்கு, ரூபாய் 30 முதல் 40, வரையிலும், பச்சை மிளகாய் ரூபாய் 50 லிருந்து 60 வரையிலும், இஞ்சி ரூபாய் 90 முதல் ரூபாய் 180 வரையிலும், பூண்டு ரூபாய் 130 முதல் 240 வரையிலும் என காய்கறிகள் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை கிலோவிற்கு ரூபாய் 20 முதல் ரூபாய் 30 வரை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். மொத்தத்தில் முதல்வர் விஜயின் சாயம் வெளுத்து வருவது நமக்கு கண்கூடாக தெரிகிறது, பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தவெக அரசின் 100 நாள் சாதனை: அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு தான் - ஆர்.பி.உதயகுமார் தாக்கு !
PulseNews சுருக்கம்

தமிழக வெற்றி கழக அரசின் கடந்த 100 நாள் ஆட்சியின் சாதனையாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவோ அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்யவோ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு நிர்வாகத்தை விட முதல்வர் விஜய் அலங்காரத்திற்கே முக்கியத்துவம் அளிப்பதாக ஆர்.பி.உதயகுமார் தனது காணொளியில் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business