TN Assembly Live Update: 4 நாட்கள் விடுமுறைக்கு பின் மீண்டும் சட்டசபை கூட்டம் - மானிய கோரிக்கை விவாதம்
தமிழக சட்டசபையில் த.வெ.க ஆட்சியின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் நாளில், நிதியமைச்சர் மரிய வில்சன், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 6-ந் தேதி வேளாண் அமைச்சர் வினோத், வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 7-ந் தேதி பட்ஜெட் மீதூன விவாதங்கள் நடைபெற்றது. ஆகஸ்ட் 8 மற்றும் 9-ந் தேதி சட்டசபை விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 10 மற்றும் 11 ஆகிய இரு நாட்களில் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது. இதில் எதிர்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பதில் அளித்து பேசினர். இதனைத் தொடர்ந்து சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. தனித் தீர்மானங்கள் நிறைவேற்றம் இந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் என்றாலும் இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் பாடப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், தொகுதி மறுவரையை எதிர்த்து முதல்வர் சட்டசபையில் தீர்மானம் கொண்ட வந்தார். நீட் தேர்வுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொகுதி மறுவரையறை சட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டசபையில் த.வெ.க ஆட்சியின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கியது. இதில் நிதியமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட்டையும், வேளாண் அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டையும் அடுத்தடுத்த நாட்களில் தாக்கல் செய்தனர்.
ஆகஸ்ட் 7-ம் தேதி பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன. நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு, ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் பட்ஜெட் மீதான விவாதங்கள் மீண்டும் தொடங்குகின்றன.