PulseNews
வணிகம்

Villuppuram Power cut : விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மின் தடை! உஷார் மக்களே!

விழுப்புரம்: விழுப்புரம் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட 22KV V.அகரம் மின்னூட்டியில் அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன்காரணமாக, இன்று (29.08.2026 - சனிக்கிழமை) காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என விழுப்புரம் விநியோக செயற்பொறியாளர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

கிழக்கு சண்முகபுர காலனி

மகாராஜபுரம்

காகுப்பம்

பொய்யப்பாக்கம்

மாதிரிமங்கலம்

ஆசிரியர் நகர்

தேவநாதசுவாமி நகர்

தொடர்ந்தனூர்

சாலைஅகரம்

லட்சுமி நகர்

M. குச்சிப்பாளையம்

மருவந்தாங்கல்

கணேஷ் நகர்

ரகவன்போட்டை

எருமனந்தாங்கல்

சமத்துவபுரம்

அனிச்சம்பாளையம்

தவிர்க்க முடியாத காரணங்கள் ஏற்படும் பட்சத்தில் மின் தடை செய்யப்படும் தேதியில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி

சத்தியமங்கலம்,

கலத்தம்பட்டு,

சொக்கனந்தல்,

பாலப்பாடி

வீரமநல்லூர்

செம்மேடு

ஆலம்பூண்டி

பரதன்தாங்கல்

பெருங்காப்பூர்

நயம்பாடி

புலிப்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அமலில் இருக்கும்.

மின்தடை காலத்தில் பொதுமக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. குடிநீர் சேமிப்பு மற்றும் கைபேசி சார்ஜ் செய்தல் போன்ற அத்தியாவசிய மின் தேவைகளை காலை 9 மணிக்கு முன்பாகவே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். மேலும், மின்தடை காலத்தில் கம்பங்களில் ஏறி சீரமைப்புப் பணிகளில் ஈடுபடும் மின்வாரிய ஊழியர்களுக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

மின்வாரியப் பணிகள் நடைபெறும் போது பொதுமக்கள் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளையோ அல்லது டிரான்ஸ்பார்மர்களையோ நெருங்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மின் விநியோகம் தொடர்பான புகார்களுக்கும், அவசரத் தேவைகளுக்கும் மின்சார வாரியத்தின் 'மின்னகம்' உதவி எண்களான 94987 94987 அல்லது 94983 90744 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.
Source: Read Full Article

Ipd Tamil - Latest Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Villuppuram Power cut : விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மின் தடை! உஷார் மக்களே!
PulseNews சுருக்கம்

விழுப்புரம் 110/22KV துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வி.அகரம் 22KV மின்னூட்டியில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன்காரணமாக, இன்று (ஆகஸ்ட் 29, 2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என விழுப்புரம் விநியோக செயற்பொறியாளர் அண்ணாதுரை அறிவித்துள்ளார்.

இந்த பராமரிப்பு பணி காரணமாக கிழக்கு சண்முகபுர காலனி, மகாராஜபுரம், காகுப்பம் மற்றும் பொய்யப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்: Ipd Tamil - Latest Tamil NewsIpd Tamil - Latest Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business