PulseNews
வணிகம்

தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! செப்டம்பர் 1 முதலே நெல் கொள்முதல்! மத்திய அரசு அதிரடி அனுமதி!

தமிழகத்தில் 2026–2027-ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் பருவத்தை வழக்கமான காலக்கட்டத்திற்கு முன்பாகவே, வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. குறுவை நெல் அறுவடை முன்கூட்டியே தொடங்குவதால், விவசாயிகளிடம் இருந்து நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் நடைமுறை

தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியை, மத்திய அரசின் இந்திய உணவு கழகமான FCI-யின் சார்பில் தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) நிர்ணயம் செய்து வழங்குகிறது. இதனுடன் தமிழக அரசின் சார்பிலும் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

நெல்லில் இருந்து ரேஷன் அரிசி வரை

அரசு கொள்முதல் செய்யும் நெல், பின்னர் அரைவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அரிசியாக மாற்றப்படுகிறது. இந்த அரிசி தமிழகத்தின் பொது விநியோகத் திட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் அரசு நெல் கொள்முதல் நடவடிக்கை விவசாயிகளின் விளைபொருளுக்கு சந்தை ஆதரவை வழங்குவதுடன், பொதுமக்களுக்கான உணவு தானிய விநியோகத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஏன் செப்டம்பர் 1-ம் தேதி முதல் கொள்முதல்?

தமிழகத்தில் நெல் கொள்முதல் பருவம் பொதுவாக அக்டோபர் 1 முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30 வரை நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், டெல்டா உள்ளிட்ட பல பகுதிகளில் குறுவை சாகுபடி நெல் முன்கூட்டியே அறுவடைக்கு வருவதால், விவசாயிகள் தங்களது நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் உடனடியாக விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்படும் நிலை இருந்தது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதலே நெல் கொள்முதல் பருவத்தை தொடங்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.

தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்

இதன் தொடர்ச்சியாக, 2026–2027-ம் ஆண்டுக்கான நெல் கொள்முதலையும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. தமிழக உணவுத் துறைச் செயலர் அமுதா, இதுதொடர்பாக மத்திய உணவுத் துறைக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய கொள்முதல் பருவத்தை தொடங்குவதற்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது.

டெல்லி கூட்டத்தில் இறுதி முடிவு

மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ள நிலையில், 2026–2027-ம் ஆண்டில் தமிழகத்தில் கொள்முதல் செய்யப்பட வேண்டிய நெல்லின் மொத்த அளவு, அதனை அரைவை செய்து அரிசியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டிய காலக்கெடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அடுத்த கட்ட ஆலோசனை நடைபெற உள்ளது. இதற்காக வரும் செப்டம்பர் 1-ம் தேதி டெல்லியில் அனைத்து மாநிலங்களின் உணவுத் துறை செயலர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கான நெல் கொள்முதல் அளவு மற்றும் அரிசி ஒப்படைப்பு கால அவகாசம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இதன் மூலம், செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் புதிய நெல் கொள்முதல் பருவம் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் வேகமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முன்கூட்டியே குறுவை நெல் அறுவடை செய்யும் விவசாயிகள், அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் தங்களது விளைபொருளை விற்பனை செய்யும் வாய்ப்பைப் பெற உள்ளனர்.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! செப்டம்பர் 1 முதலே நெல் கொள்முதல்! மத்திய அரசு அதிரடி அனுமதி!
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் 2026-2027-ம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் பருவத்தை, வழக்கமான காலத்திற்கு முன்பாகவே செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. குறுவை நெல் அறுவடை முன்னதாகவே தொடங்குவதைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளிடம் இருந்து நெல்லை விரைவாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த அனுமதி மூலம் தமிழக விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை முன்கூட்டியே விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையானது தமிழக விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business