PulseNews
வணிகம்

நீட் தேர்வுக்கு எதிரான நடவடிக்கை; தவெக அரசு அதிரடி முடிவு!

தமிழக சட்டமன்ற பேரவையின் தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதன் மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கூட்டத்தொடரின் 5ஆம் நாளான இன்று (10-08-26) சட்டப்பேரவை கூடிய போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் விழாக்களில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ கட்டாயம் முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து, அந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நாளை (11-08-26) நீட் தேர்வுக்கு எதிராக தனி தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மட்டும் நீண்ட காலமாக போராடி வருகிறது. கடந்த மாதம் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தி நாட்டையே திரும்பி பார்க்க வைத்தனர். ஆனால், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் போராடினர். டெல்லி போராட்டம் நிறைவடைந்த போதிலும் தமிழ்நாட்டின் மாணவர்கள், இளைஞர்கள் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் நாளை நீட் தேர்வுக்கு எதிரான தனித் தீர்மானத்தை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கொண்டு வரவுள்ளார். அதே போல் சிறுபான்மை மக்களை பாதிக்கும் எஃப்.சி.ஆர்.ஏ சட்டம் எனும் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவுக்கு எதிராகவும் நாளை தனித் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த தீர்மானத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கொண்டு வரவுள்ளார்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business