மேட்டூர் அணை திறப்பு - இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..!
மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில் டெல்டா பாசனத்திற்காக விரைவில் நீர் திறக்கப்படவுள்ளதாகவும், இதற்காக முதலமைச்சர் விஜய் வரும் 28-ந் தேதி மேட்டூர் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போதிய நீர் இல்லாமல், ஜூன் மாதம் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரத்து 405 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 88 அடியை கடந்துள்ள நிலையில், வழக்கமாக நீர் திறக்க தேவையான நீர்மட்டம் 90 அடியை ஓரிரு நாளில் எட்டும் போது அணை திறக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பிற்காக முதலமைச்சர் விஜய் விமானம் மூலம் சேலம் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் செல்வார் எனவும் கூறப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரத்து 405 கன அடியாக அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் 88 அடியைக் கடந்துள்ளது. போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் ஜூன் மாதம் குறுவை சாகுபடிக்காக அணை திறக்கப்படாத நிலையில், தற்போது அணை வேகமாக நிரம்பி வருகிறது.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை விரைவில் திறப்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக முதலமைச்சர் விஜய் வரும் 28-ம் தேதி மேட்டூர் செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது.