உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் விரைவில் அமல்: சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு
தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி அளித்துள்ளார். மேலும், “அதற்கான விதிகளை வகுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் குறித்தான குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்” அமைச்சர் மரிய வில்சன் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை (18.08.2026) பேசிய நிதி அமைச்சர் மரிய வில்சன், “தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் திட்டவட்டமாகக் கூறினார். சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் கூறியதாவது: “உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) பற்றி ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன். இருப்பினும், அதைத் திரும்ப ஒருமுறை சொல்லிவிடுகிறேன். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைப் (TAPS)பொறுத்தவரை, தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் ககன் தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பரிந்துரைத்தவற்றில் மிக முக்கியமான மூன்று விஷயங்களை நமது தமிழக வெற்றிக் கழகமும், முதலமைச்சர் சி. ஜோசப் விஜயும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவார்கள். கடைசி மாத ஊதியத்தில் 50% தொகையானது உத்தரவாதமான ஓய்வூதியமாக வழங்கப்படும். குழு பரிந்துரைத்துள்ள கிராஜுவிட்டி தொகையும் வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்ப ஓய்வூதியமும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும். இதற்கிடையில், ஓய்வூதியதாரர்களுக்கு ‘இன்ட்ரிம் பே அவுட்’ (Interim Pay Out) வழங்கும் முறையை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். தற்போது இதற்கான விதிகளை முறைப்படுத்தும் பணியும், செயல்பாட்டு வழிகாட்டுதல்களை உருவாக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கூடிய விரைவில் இதற்கான நடைமுறைப்படுத்தல் வழிமுறைகளும் கொண்டுவரப்படும். இந்த அவைக்கு மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமானது (TAPS) வரவிருக்கும் நாட்களில் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்” என்று அமைச்சர் மரிய வில்சன் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) நிச்சயம் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விதிகளை வகுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், ஓய்வூதியத் திட்டம் குறித்த குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.