PulseNews
வணிகம்

‘ஜி ஸ்கொயர், லாட்டரி மருமகன்...’ ; பேரவையில் தவெக - திமுக இடையே வார்த்தை மோதல்!!

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (25-08-26) தொழில்துறை, இயற்கை வளங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாத்தின் போது பரந்தூர் விமான நிலையம் திட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார், “இந்த திட்டத்திற்கு மொத்தமாக 5,846 ஏக்கர் தேவைப்பட்டது. அதில் பட்டா நிலங்கள் 3,774 ஏக்கர், மூன்று போகங்கள் விளையக்கூடிய விவசாய நிலங்கள் 2,681 ஏக்கர். இதில் காட்டப்பட்ட 1,972 ஏக்கர் அரசு நிலங்களாக காட்டப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 1,558 ஏக்கர் நிலங்கள் நீர்நிலைகள். 90% நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாக திமுக சொல்கிறது. ஆனால் அப்படி கையகப்படுத்தப்படவில்லை. இதுவரைக்கும் 1,802 ஏக்கர் மட்டும்தான் கையகப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது 48% மட்டும்தான் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதி கையகப்படுத்தவில்லை. குறிப்பாக, ஏகனாபுரம், காரை, தண்டலம், சிறுவள்ளூர் போன்ற கிராமங்களில் ஒரு சென்ட் நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை. இந்த திட்டத்தில் நிறைய தவறான தகவல்களை சொல்கிறார்கள். சுற்றுச்சூழல் அனுமதி வாங்கிவிட்டார்கள் என்று சொல்கிறார்கள், ஆனால் இதுவரை வாங்கவில்லை. இதில் நிறைய நீர்நிலைகள் இருக்கிறது. அதிமுக ஆட்சி காலத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும், ஐந்து ஆண்டுகளாக எந்தவித நகர்வும் இல்லாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் பெரும்பாலும் நீர்நிலைகள், விவசாய நிலங்கள் தான் இருக்கிறது. இதில் அதிகமாக கவலைப்பட்டு கதறுபவர்கள் யாரென்றால் ஜி ஸ்கொயர் (G Square) மாப்பிள்ளைக்காகவும் கருப்பு பணத்தை கொண்டு போய் முதலீடு செய்பவர்கள் தான். விவசாயிகளை கணக்கில் வைத்துக் கொண்டு தான் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று கூறி. அமைச்சர் நிர்மல்குமார் ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என்று கூற திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்று அவையில் கூச்சலிட்டனர். அதனை தொடர்ந்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “சட்டத்துறை அமைச்சர் இந்த அளவில் தன்னுடைய பதிலை விவாதத்தை கொண்டு போக விரும்புவார் என்றால் நானும் அதே முறையில் பேசுகிறேன். ஜி ஸ்கொயர் என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால் வேறு எந்த லாட்டரி மருமகனுக்காக புது விமான நிலையத்தை நீங்கள் கொண்டு போகிறீர்கள் என்று நான் கேட்கவா?” என்று கூறியதும் தவெக உறுப்பினர்கள் எழுந்து நின்று கூச்சலிட்டனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
‘ஜி ஸ்கொயர், லாட்டரி மருமகன்...’ ; பேரவையில் தவெக - திமுக இடையே வார்த்தை மோதல்!!
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, தொழில், இயற்கை வளங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், இத்திட்டத்திற்கு மொத்தம் 5,846 ஏக்கர் நிலம் தேவைப்பட்டதாகவும், அதில் பட்டா நிலங்கள் தொடர்பான விவரங்களையும் விளக்கினார். இந்த விவாதத்தின் போது ஜி ஸ்கொயர் மற்றும் லாட்டரி மருமகன் விவகாரங்களை முன்வைத்து, தவெக மற்றும் திமுகவினர் இடையே காரசாரமான வார்த்தைப் போர் நடைபெற்றது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business