இதை செய்யவில்லை என்றால் ஆக.16 முதல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது.. மானியமும் கிடைக்காது!
KYC Mandatory For Gas Cylinder and Subsidy | இந்தியாவில் லட்சக்கணக்கான குடும்பங்கள் கேஸ் சிலிண்டர் இணைப்பை வைத்துள்ளனர். இந்த நிலையில், கேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றால் ஆகஸ்ட் 16-ல் இருந்து இருந்து கேஸ் சிலிண்டர் மற்றும் மானியம் கிடைக்காது என கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான கேஸ் சிலிண்டர் பயனர்கள் வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் தங்களது கேஒய்சி (KYC) விவரங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவிற்குள் கேஒய்சி முடிக்காதவர்களுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகம் மற்றும் மானியம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பயனர்கள் தடையின்றி எரிவாயு மற்றும் மானியத்தைப் பெற, குறிப்பிட்ட தேதிக்குள் தங்களது விவரங்களைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நடைமுறையைச் சரியாகப் பின்பற்றாதவர்களுக்குச் சேவைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.