PulseNews
வணிகம்

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வருமானவரித் துறை வழக்கு..!

வருமானத்தையும் முதலீட்டையும் கணக்கில் காட்டவில்லை என வருமானவரித் துறை தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்கும்படி திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேருவின் சகோதரர் மணிவண்ணன் நிர்வாக இயக்குநராக உள்ள இரு நிறுவனங்களில் வருமானவரித் துறையினர் கடந்த 2018-ல் சோதனை நடத்தினர். அப்போது பறிமுதல் செய்த ஆவணங்களுடன், 2013 முதல் 2016 வரை 3 நிதி ஆண்டுகளில் நேரு தாக்கல் செய்த வருமான வரிக் கணக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, 17 கோடி ரூபாய் வருமானத்தையும், 11 கோடி ரூபாய் முதலீட்டையும் கணக்கில் காட்டாதது தெரியவந்தது. இதையடுத்து, இந்தத் தொகைகளை நேருவின் வருமானத்துடன் சேர்த்து வருமானவரித் துறை கணக்கிட்டது. இது தொடர்பான நேருவின் முறையீட்டு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதை எதிர்த்த வருமானவரித் துறையின் மேல்முறையீட்டை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமானவரித் துறை தாக்கல் செய்த வழக்கில், 4 வாரங்களில் பதில் அளிக்க கே.என்.நேருவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Polimer News1 நாள் முன் · புதுப்பிக்கப்பட்டது
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வருமானவரித் துறை வழக்கு..!
PulseNews சுருக்கம்

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான நிறுவனங்களில் 2018-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 2013 முதல் 2016 வரையிலான நிதி ஆண்டுகளில் 17 கோடி ரூபாய் வருமானம் மற்றும் 11 கோடி ரூபாய் முதலீடு கணக்கில் காட்டப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.

இந்தத் தொகையை வருமானத்துடன் சேர்த்து வருமான வரித்துறை கணக்கிட்டதை எதிர்த்து நேரு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்டது. இதனை எதிர்த்து வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கே.என்.நேருவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business