வீட்டிற்கே வரும் அரசுப் பேருந்து; பெரும் மகிழ்ச்சியில் பயணிகள்
ஆந்திரப் பிரதேச மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் (ஏபிஎஸ்ஆர்டிசி) நீண்ட தூரச் சொகுசு பேருந்துகளில் மொத்தமாகப் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு வீட்டிற்கே வந்து அழைத்துச் செல்லும் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, தொலைதூர ஊர்களுக்கு உயர்தர பேருந்துகளில் செல்வதற்காக ஒரே பகுதியில் அல்லது ஒரே வழித்தடத்தில் அருகருகே உள்ள இடங்களில் வசிக்கும் 10க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்திருந்தால், அவர்களது வீடுகளுக்கே சென்று அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக, விஜயவாடா நகர எல்லைக்குள் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தச் சேவை ஏசி, ஸ்லீப்பர் மற்றும் சூப்பர் சொகுசுப் பேருந்துகள் உள்ளிட்ட உயர் ரக மற்றும் நீண்ட தூர வாகனங்களுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, கனமான சாமான்களை எடுத்துச் செல்லும் பயணிகள் பிரதான பேருந்து நிலையத்திற்குச் செல்வதைத் தவிர்க்கவும் உதவுகிறது. இந்த திட்டம் சோதனை ஓட்டத்திற்குப் பிறகு மாநிலம், முழுவதும் விரிவு படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம், நீண்ட தூர சொகுசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்காக வீட்டிற்கே வந்து அழைத்துச் செல்லும் புதிய சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. ஒரே பகுதி அல்லது வழித்தடத்தில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் குழுவாக முன்பதிவு செய்தால், அவர்களது இருப்பிடத்திற்கே சென்று பேருந்து அழைத்துச் செல்லும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காகச் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நீண்ட தூரப் பயணங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு இந்த சேவை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.