PulseNews
வணிகம்

வருவாயை உயர்த்த மாண்டேக் சிங் தலைமையில் குழு: தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் வருவாயை உயர்த்துவதற்கான வழிமுறைகளை கண்டறிந்து அறிக்கை அளிக்க திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பொருளாதார நிபுணரான மான்டேக் சிங் அலுவாலியா, மத்திய திட்டக்குழுவின் முன்னாள் தலைவராக செயல்பட்டு வந்தார். தமிழ்நாடு பட்ஜெட்டின் நிதி நிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5 அன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு அரசின் வருவாயை பெருக்கும் குழுவின் தலைவராக மான்டேக் சிங் நியமிக்கட்டுள்ளார். இவர் தலைமையிலான குழுவினர்கள், மாநிலத்தில் வருவாய் ஆதாரங்களை பெருக்க, வழிமுறைகளை ஆராய்ந்து தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மான்டேக் சிங் தலைமையிலான குழு, வரி மற்றும் வரியில்லா வருவாயை அதிகரிக்க கொள்கை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை அரசுக்கு வழங்க உள்ளது. மேலும் மாநிலத்திற்கு தேவையான புதிய வருவாய் ஆதாரங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ள உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழு, தமிழ்நாடு அரசிடம் மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #BREAKING | தமிழ்நாடு அரசின் வருவாயை உயர்த்துவதற்கான வழிமுறைகளை கண்டறிந்து அறிக்கை அளிக்க திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு 6 பேர் கொண்ட இக்குழு 3 மாதங்களில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என தெரிவிப்பு #SunNews |... pic.twitter.com/stNApKkGW7 — Sun News (@sunnewstamil) July 27, 2026 இந்தக் குழுவில் கே.பி. கிருஷ்ணன், அர்பிந்த் மோடி நஜிப் ஷா (ஐ.ஆர்.எஸ்., ஓய்வு), எம்.ஏ. சித்திக், ஐ.ஏ.எஸ் சுரேஷ் பாபு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவானது மாநிலத்தின் மொத்த வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அதனை மேம்படுத்துவது குறித்தும் கொள்கை மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்தும் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும். மேலும், வரி ஏய்ப்பு, நிர்வாக செயல்திறனில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யும் நடவடிக்கைகள், மதுபானம் மீதான ஒழுங்கு முறை மற்றும் வரிவிதிப்பு கொள்கையில் மாற்றங்களை செய்து அதில் கிடைக்கும் வருவாயை அதிகரிப்பதற்கான வழிகளையும் பரிந்துரைக்கும்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business