PulseNews
வணிகம்

தொடு குறி சாஸ்திரம்! -மேல்மருவத்தூர் எஸ் கலைவாணி

வா ழ்வின் வளத்தையும், நலத் தையும், எண்களைக் கொண்டு எவ்வாறு கணக்கிட முடியும் என்கின்ற மாபெரும் சந்தேகத்திற்கு மகத்தான பதில் அளித்துக் கொண்டிருக்கின்றது. இந்த சகாதேவ ஆருடம். பெரிய கணிதமோ அல்லது நுணுக்கமோ, இல்லாமல் சாமானிய மனிதர்களும் தங்க ளுக்கு உண்டான பலனை தாங்களே தெரிந்து கொள்ளும் அளவிற்கு வடிவமைக் கப்பட்ட இந்த ஆருடம் எண்ணற்ற அற்புதங் களை நல்கி வருகின்றது நாள்தோறும். அடுத்தடுத்து வரும் பாடல்களையும், விளக்கங்களையும், தொடர்ந்து காணலாம். 411-ஆவது ஆருடம் "கஷ்டமு மிகவே தோணுங் காண்பது நிராசையாகும் துஷ்டரின் சிநேகத்தாலே ரோஷமாய்ப் பகையும்நேரும் நஷ்டமா மிவைகளெ ல்லாம் நாடாமல் விலகியோடும் இஷ்டமாங் குல தேவதைக்கு வியல்புடன் பூசை செய்வாய்''. விளக்கம்: நீ நானூற்றி பதினொன்றை தொட்டதால் நினைத்த காரியம் கைகூடாது, ஆசை நிராசையாகும், ஒரு சினேகிதனால் அபாயம் வரும், அவனை நம்ப வேண்டாம். நீ உன் குலதெய்வத்தை பூசை செய்ய நாளுக்கு நாள் கைகூடும் மத்திபம். 412-ஆவது ஆருடம் "கன்னியி னாசையாலே கவலையும் படுகிறாய் நீ இன்னமுஞ் சில நாள் போனால் யிஷ்டத்தின் படியேகூடும் தன்னிக ராகவேதான் தரித்திடும் புத்திர லாபம் உன்னிட குல தெய்வத்தை வுகந்து நீ பூசை செய்ய செய்யே.'' விளக்கம்: நீ தொட்ட லக்கம் 412 ஆகையால் நினைத்த காரியம் கைகூடும். ஒரு பெண் சம்பந்தத்தை பற்றி விசனப்படுகிறாய், அது இன்னும் கொஞ்ச தினத்திற் குள் கைகூடும். புத்திர லாபமாகும், குலதெய்வத்தை மட்டும் போதித்து வா. 413-ஆவது ஆருடம் "நித்தமும் பணத்தின்னா சை நீட்டியுன் மனதில் வாட்டும் உத்தம ஸ்திரீனாலே வுதவியால் பொருளுஞ் சேரும் பத்திய கிரக நன்மை பலத்ததோர் சினேகங்கூடுஞ் சித்தியாம் ஜாதகத்தில் சொல்மொழி தப்பிப்போச்சே.'' விளக்கம்: நீ தொட்ட லக்கத்தில் விவரம் கேள் உனக்கு பணத்தினுடைய விசனம் ஒன்று இருக்கின்றது ஒரு பெண்ணால் பொருள் உதவி கிடைக்கும் ஒரு பெரிய மனிதரால் உதவி உண்டாகும். வெளியூரில் வேலை கிட்டும், ஆனால் உன் ஜாதகம் ஒன்று தப்பி இருக்கின்றது உத்தமம். 414-ஆவது ஆருடம் "பட்டவுடன் துன்பந்தன்னை பகர்ந்திட முடியாதப்பா தொட்டதோர் கிரகம் போச்சு துணையது யினிமேலாச்சு இட்டமாய் மனதிற்கொண்ட எண்ணமும் ஒரு மாதத்தில் கெட்டியாய் பலிக்குமென்றே காண்டீபன் தம்பி சொன்னார்.'' விளக்கம்: நீ மிகவும் வருத்தப்பட்டாய், அந்த வருத்தம் நீங்கி விட்டது, ஆனால் உன் மனதில் ஒரு எண்ணம் வைத்திருக்கிறாய், அது இன்னும் ஒரு மாதத்தில் கைகூடும். குலதெய்வத்தை பூஜை செய்யவும் இந்த நூல் பஞ்சபாண்டவர்களில் ஒருவராகிய சகாதேவர் சொன்னது உத்தமம். 421-ஆவது ஆருடம் "பொருளது கைவிட்டேகி புலம்பி நீ வாடுகின்றாய் அருளுடன் வந்து சேரும் அயலூரின் பலனை காட்டும் மறுமொழி கவலை வேண்டா மைந்தனை பெற்று வாழ்வாய் குரு மொழி யாகநம்பி குறிப்பை நீ யறிந்து கொள்ளே.'' விளக்கம்: நீ தொட்டது என்னவென்றால் கைவிட்டுப் போன பொருளை பற்றி வசனப்படுகின்றாய், அது கைகூடும். வெளியூரில் உதவி கிடைக்கும், புத்திர லாபமாகும், விசனப்பட வேண்டாம். 422-ஆவது ஆருடம் "சென்றதோர் வருடமூன்றுஞ் சிறுமையால் மெய்யேதாகும் இன்றுடன் பீடையெல்லாம் ஒழிந்திடும் பயப்படாதே நன்றென யெடுத்த வேலை நம்பிசெய் கவலை வேண்டாம் வென்று நீ வாழ்வாயப்பா வேணாதோர் புத்திரரொடே''. விளக்கம்: நீ மூன்று வருடமாய் மிகவும் வருத்தப்பட்டார் அந்த வருத்தம் நீங்கி விட்டது, எந்த வேலை செய்தாலும் இனி பலிக்கும் விசாரித்து செய், பயப்படாதே புத்திர லாபம் உண்டு குலதெய்வத்தை எண்ணத்தில் வைத்து பூஜையை செய்து வா. 423-ஆவது ஆருடம் "குறைவது யில்லை சொன்னேன் கொண்டதோ ரெண்ணஞ்சாயும் பெருகுவா யதிகலாபம் பின்னொகு பயமும் வேண்டாம் திறமுடனே யெத்தொழிலும் தீரமாய்ச் செய்வாயானால் அறியவே பலிக்குஞ் சொன்னே னாயன்றன் னருளினாலே.'' விளக்கம்: நீ நினைத்த காரியம் முடியும், எத்தொழில் செய்தாலும் அதிக லாபம் காணும். ஒரு முறைக்கு இருமுறை விசாரித்து ஒவ்வொரு காரியத்தையும் செய் பயப்பட வேண்டாம் உத்தமம். 424-ஆவது ஆருடம் "நம்பின யெண்ணமெல்லாம் நஷ்டத்திலொழ்ந்துபோச்சு வெம்பியே வாடுகின்றாய் வீட்டிலுஞ்சுகமுமி ல்லாமல் தெம்புடன் வாழப் போகிறாய் தைரியம்விடவே வேண்டாம் உம்பன்றன் சாட்சியாக யுரைத்தசொல் நம்பிப்பாரே.'' விளக்கம்: நீ தொட்ட இலக்கம் என்னவென்றால் மிகவும் வருத்தப்படுகின்றாய், நினைத்த வேலையெல்லாம் நஷ்டமாகி விட்டது, வீட்டிலும் நிம்மதி இல்லை, ஆனால் இனி சுகப்படுவாய் பயப்பட வேண்டாம். செல்: 8056379988

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தொடு குறி சாஸ்திரம்! -மேல்மருவத்தூர் எஸ் கலைவாணி
PulseNews சுருக்கம்

மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி அவர்கள், எண்களைக் கொண்டு ஒருவரது வாழ்வின் நலத்தையும் வளத்தையும் கணிக்கும் ‘சகாதேவ ஆருடம்’ குறித்து விளக்கியுள்ளார். கடினமான கணித முறைகள் ஏதுமின்றி, சாமானிய மக்களும் தங்களின் பலன்களை எளிதாகத் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த ஆருடக் கலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினமும் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி வரும் இந்த ஆருடத்தின் தொடர்ச்சியை, பாடல்கள் மற்றும் விளக்கங்களுடன் இனி வரும் பதிவுகளில் காணலாம். இதன் ஒரு பகுதியாக, 411-ஆவது ஆருடம் குறித்த விளக்கம் "கஷ்டமு மிகவே தோணுங் காண்பது நிராசையா..." என்ற வரியுடன் தொடங்குகிறது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business