தமிழகத்திலேயே அதிக கல்விக் கடன் வழங்கிய மாவட்டமாக மதுரை சாதனை !

மதுரை மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) சார்பில், மாணவர்களுக்கான நடப்பு ஆண்டின் மாபெரும் கல்விக் கடன் முகாம் (Education Loan Mela) தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில் இன்று (25.08.2026) நடைபெற்றது.

'வித்யா லட்சுமி' இணையதளத்தில் பதிவு செய்ய ஊக்குவிக்க வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் கல்விக் கடன் வழங்குவதில் தொடர்ந்து சிறப்பான சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. முதல் ஆண்டில் ரூ.108 கோடியாக இருந்த கல்விக் கடன் வழங்கல், கடந்த ஆண்டு சுமார் ரூ.200 கோடியாக உயர்ந்து, தமிழகத்திலேயே அதிக கல்விக் கடன் வழங்கிய மாவட்டமாக மதுரை சாதனை படைத்துள்ளது. நடப்பு ஆண்டில் இச்சாதனையை மிஞ்சும் வகையில் கூடுதல் இலக்கை எட்ட வேண்டும். "கல்விக் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தினால் ஒரு மாணவர் கூடப் படிப்பை இடையில் கைவிடும் (Drop-out) நிலை ஏற்படக் கூடாது" என்பதை இலக்காகக் கொண்டு அனைத்து வங்கிகளும் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். மாணவர்கள் எந்தவொரு குறிப்பிட்ட பகுதி எல்லைக்கும் உட்படாமல், தங்களுக்கு அருகிலுள்ள எந்தவொரு வங்கிக் கிளையிலும் கல்விக் கடன் பெற முடியும் என்ற விழிப்புணர்வை மாணவர்களிடையே முழுமையாக ஏற்படுத்த வேண்டும். மேலும், கல்விக் கடன் பெறுவதற்கு எவ்வித கட்டணமும் இல்லை என்ற தகவலையும் கொண்டு சேர்க்க வேண்டும். அதிக அளவிலான கல்விக் கடன்களுக்கு மட்டுமல்லாமல், ஏழை மற்றும் எளிய குடும்பத்து மாணவர்களின் கல்வித் தேவைக்கு ஏற்ப சிறிய அளவிலான கல்விக் கடன்களையும் (Small Ticket Loans) தடையின்றி வழங்க வங்கிகள் முன்வர வேண்டும். அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பிரத்யேக உதவி மையங்கள் (Individual Cells) அமைத்து, உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களில் கல்விக் கடன் தேவைப்படுவோரைக் கண்டறிந்து, அவர்களை 'வித்யா லட்சுமி' இணையதளத்தில் பதிவு செய்ய ஊக்குவிக்க வேண்டும்.

வங்கிகள் சிறப்பாகச் செயல்பட்டு இலக்கை அடைந்தன

கடந்த ஆண்டு பொதுத்துறை வங்கிகள் சிறப்பாகச் செயல்பட்டு இலக்கை அடைந்தன. இந்த ஆண்டு பொதுத்துறை வங்கிகளுக்கு இணையாகத் தனியார் துறை வங்கிகளும் முழு ஈடுபாட்டுடன் கல்விக் கடன்களை வழங்கி இலக்கை அடைய வேண்டும். வரவிருக்கும் மாபெரும் கல்விக் கடன் முகாமிற்கு முன்பாகவே அனைத்துத் தகுதியான மாணவர்களையும் இணையதளத்தில் பதிவு செய்ய வைத்து, முகாம் நடைபெறும் ஒரே நாளில் குறைந்தபட்சம் ரூ.100 கோடி அளவிற்கு கல்விக் கடன்களை வழங்கிட அனைத்து வங்கிகளும் ஒன்றிணைந்து முனைப்புடன் செயலாற்ற வேண்டும். இக்கூட்டத்தில், மாணவர்கள் PM-வித்யா லட்சுமி போர்ட்டல் (pmvidyalakshmi.gov.in) மூலம் எளிய முறையில் கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான விரிவான செயல்முறை விளக்கம் வங்கி அலுவலர்களுக்கு அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளர் பிரசாந்த் நாயக், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பார்த்திபன், மாவட்ட வளர்ச்சி மேலாளர்( நபார்டு) சக்திகாந்த் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கியின் சார்பில், மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாம் குறித்த முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று (25.08.2026) நடைபெற்றது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ‘வித்யா லட்சுமி’ இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்வதை ஊக்குவிக்க அறிவுறுத்தப்பட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழகத்திலேயே அதிக அளவில் கல்விக் கடன் வழங்கிய மாவட்டமாக மதுரை தொடர்ந்து சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பான செயல்பாட்டைத் தொடரத் தேவையான நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.