புதுச்சேரி - திருப்பதி இடையே விமான சேவை: மத்திய அமைச்சருடன் மல்லாடி கிருஷ்ணாராவ் முக்கிய ஆலோசனை
புதுச்சேரியில் இருந்து திருப்பதி மற்றும் கோயம்புத்தூருக்கு விமான சேவை இயக்க வலியுறுத்தி, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் புதுச்சேரி விமான போக்குவரத்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டதோடு, அது தொடர்பான திட்ட அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. புதுச்சேரியில் இருந்து ஏற்கனவே ஹைதராபாத்துக்கு விமான சேவை இயக்கப்படும் நிலையில், அதை மேலும் விரிவுபடுத்தும் வகையில் திருப்பதி வரை இயக்குவதற்கு விமான நிறுவனங்கள் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதே போல் புதுச்சேரியில் இருந்து சென்னை சென்று, அங்கிருந்து கோயம்புத்தூர் வரை விமானத்தை இயக்குவதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்க தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். மேலும், புதுச்சேரியை பசுமை விமான நிலையமாக மாற்றுவதற்கான முழு நிதியை அளிக்கவும் மத்திய அரசு உதவி செய்யும் என்று கூறப்பட்டது. விமான ஓடு பாதை விரிவாக்க திட்டத்துக்கு ஏற்கனவே ஒன்றிய அரசு நிதி அளித்துள்ள நிலையில், பெரிய விமானங்கள் வந்து செல்வதற்கு தேவையான அனைத்து உதவியையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கூறினார். இச்சந்திப்பின் நிறைவில் மத்திய அமைச்சருக்கு, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். செய்தி: பாபு ராஜேந்திரன்

புதுச்சேரியில் இருந்து திருப்பதி மற்றும் கோயம்புத்தூருக்கு விமான சேவைகளைத் தொடங்க வலியுறுத்தி, மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் புதுச்சேரி விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது, புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத் திட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதுடன், அது தொடர்பான திட்ட அறிக்கையும் மத்திய அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத்திற்கு விமான சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில், அதனை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இந்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.