PulseNews
வணிகம்

ரூ.1,11,793 ஐபோனுக்குப் பதில் தாடி வளர்ப்பு எண்ணெய் டெலிவரி..!

ஃபிளிப்கார்ட் ஆன்லைன் விற்பனைத் தளத்தில் பணம் கட்டி ஐபோன் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு தாடி வளர்ப்பு எண்ணெய் டெலிவரி செய்யப்பட்டது. மும்பையைச் சேர்ந்த வாடிக்கையாளர்,கடந்த 2023, ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி, ஐபோன் 14 ப்ரோ போன் வாங்க ஃபிளிப்கார்ட்டில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 793 ரூபாய் செலுத்தியுள்ளார். ஆனால், அவருக்கு ஐபோனுக்கு பதிலாக தாடி வளர்ப்பு எண்ணெய் டெலிவரி செய்யப்பட்டது. இதுகுறித்து ஃபிளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் அந்த வாடிக்கையாளர் வழக்குத் தொடுத்தார். விசாரணையின் முடிவில், ஃபிளிப்கார்ட் நிறுவனமும், ஐபோன் விற்பனையாளரும் வாடிக்கையாளர் செலுத்திய ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 793 ரூபாயை 9 சதவீத வட்டியுடன் திருப்பித் தரவும், மன உளைச்சல் மற்றும் வழக்குச் செலவுக்காக 70 ஆயிரம் ரூபாயை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Polimer News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

Polimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business