அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!
அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்துக்கொள்ளலாம் என்பதை வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில், அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த கலா என்பவரிடம் இருந்து ரூ.45,000 பணத்தை அதிகாரிகள் கைப்பற்றப்பட்டது. இந்த சம்பந்தமாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் தன் மீதான துறை ரீதியிலான நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என கலா மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கைப்பற்றப்பட்ட ரூ.45,000 பணம் தனது மகளின் திருமணச் செலவுக்காக வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசு தரப்பில், ஒரு அரசு ஊழியர் பணியின் போது வைத்திருக்கக்கூடிய பணத்தின் அளவை தாண்டி அவர் பணம் வைத்திருந்ததால் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி புகழேந்தி, ‘அரசு தரப்பில் சம்பந்தப்பட்ட நபர் பணியின் போது அதிக பணம் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எவ்வளவு பணம் என்பது குறிப்பிடவில்லை. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக இது போன்ற உத்தரவுகள் உள்ளது. தற்போதைய காலத்தில் அரசின் நடவடிக்கைகளும், அனைத்தும் பணி பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் பணியில் உள்ள போது தங்கள் சொந்த செலவிற்காக எவ்வளவு பணம் வைத்துக்கொள்ளலாம் என்ற வழிமுறைகளை வகுக்க வேண்டிய ஒரு சரியான தருணம். ஏனென்றால் எந்த பணமும் பணமாக கட்ட வேண்டிய சூழல் இல்லாத போது அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்ற ஒரு விதியை உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கும் பட்சத்தில் தான் லஞ்ச ஒழிப்புத்துறை, லஞ்சத்தை முற்றிலுமாக ஒழிக்க வழிவகுக்கும். எனவே அரசு, இது போன்ற ஒரு உத்தரவுகளை பிறப்பிக்க முடியுமா என்பது குறித்தும்? அது என்ன நிலையில் உள்ளது என்பது குறித்தும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

அரசு ஊழியர்கள் தங்களது வசம் எவ்வளவு பணத்தை வைத்திருக்கலாம் என்பதற்கான வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வலியுறுத்தியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2021-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், கலா என்பவரிடம் இருந்து 45,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக கலா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரும் சூழலில், நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.