PulseNews
வணிகம்

பட்ஜெட் உரை மரபுகளை மாற்ற வேண்டும்: நிதி அமைச்சர் எழுதவில்லை... - PTR பழனிவேல் தியாகராஜன் !

நிதி அமைச்சர் இந்த பட்ஜெட்டை எழுதியிருக்க முடியாது; மரபுகளை மாற்ற வேண்டும்" - தனியார் தொலைக்காட்சிக்கு முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி.

முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பேட்டியில்

பட்ஜெட் உரைகளை மணி கணக்கில் வாசிக்கும் தற்போதைய நடைமுறையை மாற்றி, இயற்கையான முறையில் உரையாற்றும் புதிய வழிமுறையைக் கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு தனுது பேட்டியளித்துள்ளார். தற்போதைய பட்ஜெட் தாக்கல் முறை குறித்து அவர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனது கணிப்பின்படி தற்போதைய பட்ஜெட்டை தற்போதைய நிதி அமைச்சர் எழுதியிருக்க முடியாது யாரோ அதிகாரிகள் எழுதிக் கொடுத்த ஒரு நீண்ட ஆவணத்தைப் படிக்கும்போதுதான், வாசிப்பதில் சிரமங்களும் தடுமாற்றங்களும் இயற்கையாகவே ஏற்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நீண்ட ஆவணத்தைப் படிப்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது

தமது பதவிக்கால பட்ஜெட் தயாரிப்பு அனுபவத்தைப் பகிர்ந்த அவர், "முந்தைய காலங்களில் நான் பட்ஜெட் தயாரித்தபோது, அந்த ஆவணத்தை நானேதான் எழுதினேன். என்னால் உறுதியாகக் கூற முடியும். நான் முதலில் அதை ஆங்கிலத்தில் எழுதி, பின்னர் யாரையாவது கொண்டு தமிழில் மொழிபெயர்க்கச் செய்து, அதை ஒருமுறைக்கு இருமுறை பயிற்சி செய்து வாசித்தேன். அப்படி இருந்தும் கூட, இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஒரு நீண்ட ஆவணத்தைப் படிப்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

நேரடியாகப் பேசும் வழக்கம் கொண்டவர்

மேலும், சபையில் சில விதிமுறைகள் நல்லதாக இருந்தாலும், சிலவற்றை நாம் உறுதியாக மாற்ற வேண்டும். பொதுவாக எந்தவித தாள்களோ அல்லது ஆவணங்களோ இன்றி 99% நேரடியாகப் பேசும் வழக்கம் கொண்டவர், புள்ளிவிவரங்களைக் கூட நினைவில் வைத்தே பேசுவதாகவும் அவர் கூறினார். அதிகபட்சமாக, இரண்டு மணி நேர உரையாக இருந்தால் எண்களை மட்டும் ஒரு குறிப்புச் சீட்டில் எழுதி வைத்துக் கொண்டு பேசும்போது, அது மிகவும் இயற்கையாகவும், மக்கள் கேட்பதற்கு சுவாரசியமாகவும் இருக்கும் என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். பட்ஜெட் உரைகளை நீண்ட நேரம் வாசிக்கும் தற்போதைய நடைமுறை தேவையா என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

பட்ஜெட் வாசிப்பு முறையை மாற்றுவது குறித்து தீவிரமாக யோசிக்க வேண்டும்

இன்றைய காலகட்டத்தில் பட்ஜெட் தொடர்பான அனைத்து விவரங்களும் இணையத்திலேயே பதிவேற்றப்பட்டு விடுகின்றன. சட்டமன்ற மானியக் கோரிக்கைகளின் போது, உரை அவைக் குறிப்பில் ஏறிவிட்டதாகக் கொண்டு விவாதத்தைத் தொடங்குவது போன்ற நடைமுறையை பட்ஜெட்டுக்கும் பின்பற்றலாம். பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை (Highlights) மட்டும் சபையில் இயற்கையாகப் பேசிவிட்டு, முழு விவரங்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். அதிகாரிகளின் சிந்தனை என்பது எப்போதும் பழைய மரபுகளையே தொடர்ந்து நீட்டிக்கச் செய்வதாக இருக்குமே தவிர, அவர்களிடம் புதிய கோணத்திலான சிந்தனை (Out of the box thinking) இருப்பதில்லை என்றும், எனவே இந்த பட்ஜெட் வாசிப்பு முறையை மாற்றுவது குறித்து தீவிரமாக யோசிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பட்ஜெட் உரை மரபுகளை மாற்ற வேண்டும்: நிதி அமைச்சர் எழுதவில்லை... - PTR பழனிவேல் தியாகராஜன் !
PulseNews சுருக்கம்

தற்போதைய பட்ஜெட் உரையை நிதி அமைச்சரே எழுதியிருக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

பட்ஜெட் உரையை பல மணி நேரம் வாசிக்கும் தற்போதைய வழக்கத்தை மாற்றி, இயற்கையான முறையில் உரையாற்றும் புதிய நடைமுறையைக் கொண்டு வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business